காராபூந்தி
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
மிளகாய் பொடி - சிறிதளவு (ஒரு pinch)
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
baking soda - சிறிதளவு
எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவு

செய்முறை

அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காய்ச்சவும். மேற்கூறிய பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும் (தோசை மாவு பதத்திற்கு). கொதிக்கும் எண்ணெய் மீது பூந்தி கரண்டி வைத்து இந்த மாவை ஊற்றவும்.

சிறு சிறு துளிகளாக மாவு எண்ணெயில் விழுந்து பொரியத் தொடங்கும். பொன்னிறமாக மாறியவுடன் எண்ணெயிலிருந்து எடுத்து அதிக எண்ணெயை வடிகட்டி, பாத்திரத்தில் போடவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com