குஞ்சாலட்டு
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 2 கப்
பச்சரிசி மாவு - 2 ஸ்பூன்
சர்க்கரை - 2 கப்
எண்ணெய் - பூந்தி பொரித்தெடுக்க
உப்பு - சிறிதளவு
முந்திரி - 1/4 கப்
உலர்ந்த திராட்சை - 1/4 கப்
ஏலக்காய் - 7
டைமண்ட் கல்கண்டு - 1/8 கப்
கேசரி பவுடர் - சிறிதளவு

செய்முறை

சர்க்கரைப் பாகு

சர்க்கரையை அதே அளவு தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் காய்ச்சவும். கேசரி பவுடரை இதில் சேர்த்து நன்கு கிளறவும்.

பூந்தி

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும் (தோசை மாவு பக்குவத்திற்கு).

வாணலியில் எண்ணெயைக் காய்ச்சவும்.

பூந்திக் கரண்டி கொண்டு கொதிக்கும் எண்ணெயின் மீது கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி பொரியும் வரை நன்கு கிளறவும்

அடுப்பிலிருந்து எடுத்து அதிக எண்ணெயை வடிகட்டவும். பின்னர் பூந்தியை சர்க்கரைப் பாகில் போட்டு நன்கு கிளறவும்

லட்டு

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் கல்கண்டு ஆகியவற்றை சர்க்கரைப் பாகில் கலந்த பூந்தியில் போட்டு நன்கு கிளறவும். கையில் பிடித்து

உருண்டை செய்யும் வரை சூடு தணிந்த பின், இந்தக் கலவையில் சிறிதளவு எடுத்து உருண்டைகளாக்கிக் கொள்ளவும். சிறிது நேரம் ஆறவைத்து, எடுத்து வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com