உக்கரை
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1 கப்
முந்திரி பருப்பு - 25
வெல்லம் - 1 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/4 கப்
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை

அனைத்து பருப்புகளையும் நன்றாக கழுவி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும். அரைத்த மாவை இதில் போட்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும் (உசிலி பதம் வரும் வரை). குக்கரில் கூட மாவை வேக வைத்துக் கொள்ளலாம். அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஒரு கப் தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து கொதிக்கவிடவும். பின்னர் வேகவைத்த மாவை கொதிக்கும் வெல்லத்தில் இட்டு நன்று கலக்கவும். தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

துருவிய தேங்காய், முந்திரி ஆகியவற் றை நெய்யில் வறுக்கவும். இதனையும், ஏலக்காய் பொடியையும் மாவுக்கலவையில் இட்டு நன்கு கிளறவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com