சோமாசி
தேவையான பொருட்கள்
பொட்டுக் கடலை - 3/4 கப்
சர்க்கரை - 1 கப்
தோல் நீக்கிய ஏலக்காய் - 7
துருவிய தேங்காய் - 1 கப்
மைதா - 1/2 கப்
ரவை - 1/2 கப்

செய்முறை

பூர்ணம்

கையால் தொட்டால் சுடும் வரை பொட்டுக் கடலையை காய்ந்த வாணலியில் வறுக்கவும். துருவிய தேங்காயை பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். வறுத்த பொட்டுக் கடலை, தேங்காய் துருவல், சர்க்கரை, தோல் நீக்கிய ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு அரைக்கவும். பூர்ணம் தயார்.

மேல் மாவு

ரவையையும் மைதாவையும் சிறிதளவு தண்ணீர் விட்டு பிசையவும் (சப்பாத்தி மாவு பதம்) ஒரு மணி நேரம் இந்த மாவை வைக்கவும்

சிறிதளவு மாவை எடுத்து உருட்டி, சப்பாத்தியைப் போன்று இட்டுக் கொள்ளவும். 2 ஸ்பூன் பூர்ணத்தை எடுத்து இதில் வைத்து மூடி ஓரங்களை ஒட்டவும் (அரை வட்ட வடிவில்). எண்ணையில் நன்றாக பொரித்தெடுக்கவும். அதிக எண்ணையை வடி கட்டி, சோமாசியை எடுத்து வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com