ரவா லட்டு
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
பொடி செய்த சர்க்கரை - 1 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
நெய் - 1/4 கப்
வறுத்த முந்திரி - 1/8 கப்

செய்முறை

ஈரமில்லாத வாணலியில் ரவையை நன்றாக வறுக்கவும். பொடி செய்த சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகியவற்றை இதில் சேர்த்துக் கலக்கவும். வறுத்த முந்திரியையும் இதனோடு சேர்க்கவும். நெய் உருகும் வரை லேசாக சூடு படுத்தி, இதில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com