தேவையான பொருட்கள் துருவிய தேங்காய் - 1 கப் சர்க்கரை - 1 கப் நெய் - 1/8 கப் ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன் வறுத்த முந்திரி - 1 ஸ்பூன் (தேவையெனில்)
செய்முறை
துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரையை அடி கனமான வாணலியில், மிதமான சூட்டில் நன்றாக கிளரவும். இந்தக் கலவை கட்டியான பிறகு நெய்யை ஒவ்வொரு ஸ்பூனாகச் சேர்த்து நன்கு கிளறவும். பர்பி பாத்திரத்தில் பொங்கி எழும் வரைக் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். ஒரு பெரிய தட்டை எடுத்து அதன் மீது நெய்யைத் தடவவும். பின்னர் பர்பியை இதில் ஊற்றி ஒரு மூன்று நிமிடங்கள் ஆற விடவும்.
சதுர வடிவில் பர்பியை வெட்டி எடுக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |