காமெராவுக்கு முன்னால்
'பாரதி' படத்தில் இடம் பெற்ற "நிற்பதுவே நடப்பதுவே" பாடலின் இனிமையான குரலை யாரால் மறக்கமுடியும். பாடகர் ஹரிஷ் ராகவேந்தர் பாடிய முதல் திரைப்படப் பாடல் இது தான். பின்னர் 'மின்னலே', 'ஷாஜகான்' போன்ற படங்களிலும் பாடியுள்ளார். 'விகடன்' படத்தின் மூலம் கதாநாயகனாக வலம் வரத் தயாராகியுள்ளார் ஹரிஷ். இவருக்கு ஜோடி காயத்ரி ரகுராம். இதற்கு முன்னால் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்த போது, எதிலும் திருப்தி ஏற்படாததால் அனைத்தையும் மறுத்திருக்கிறார் ஹரிஷ். ஆனால், சஸ்பென்ஸ், காதல், நகைச்சுவை, திகில் ஆகியவை அடங்கிய இந்தக் கதை இவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இவரை படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளச் செய்தவர் நடிகர் - இயக்குனர் அருண் பாண்டியன். 'தேவன்' படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கும் இரண்டாவது படம் 'விகடன்'. பார்வைக்கு அழகாகத் தோன்றும் ஹரிஷ், நடிப்பிலும் மிளிர்வார் என்று நம்புவோமாக.

ஸ்ரீவத்ஸன்

© TamilOnline.com