செட்டிநாடு ஹவுஸ்
இயக்குனர் - நடிகர் ராஜ்கிரண் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் 'செட்டிநாடு ஹவுஸ்'. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும் இரட்டை வேடம். ரமேஷ் கண்ணா, ஹனீ·பா, பாண்டு, இளவரசு, நம்பிராஜன், M.S. பாஸ்கர், R.V. ரவிகுமார், ஸ்ரீவித்யா, சபிதா ஆனந்த், ஐஸ்வர்யா மற்றும் புதுமுகம் ஸ்வப்னா ஆகியோரும் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. ராயல் புரொடெக்ஷன்ஸ் சார்பாக B.R. சிவராஜ், A. பிரகாசம் தயாரிக்கும் படம் 'செட்டிநாடு ஹவுஸ்'. இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் 'அங்கிங்கு' செல்ல முத்தையா. ஒளிப்பதிவு பி. பிரிமோஸ்; கலை மகி; எடிட்டிங் L. கேசவன்; சண்டைப் பயிற்சி சூப்பர் சுப்பராயன்; நடனம் ஜான் பாபு - அஜய்ராஜ்.

ஸ்ரீவத்ஸன்

© TamilOnline.com