ஜனனம்
அருண் (அருண் குமார் தனது பெயரை சுருக்கியுள்ளது பழைய செய்தி), பிரியங்கா ஜோடியாக நடிக்க 'உளவுத்துறை' படத்தினை இயக்கிய D. ரமேஷ் இயக்கத்தில் வளர்ந்து வருகிறது 'ஜனனம்'. கிரசெண்ட் மூவி இண்டர்நேஷனல் சார்பாக K.M. நூர்ஜகான் தயாரிக்கிறார். நாசர், ரகுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை பரத்வாஜ்; எடிட்டிங் வாசு - சலீம்; சண்டைப் பயிற்சி சூப்பர் சுப்பராயன்; ஒளிப்பதிவு N. ராகவ். வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் இந்தப் போக்கினை எதிர்த்து போர்க்கொடி தூக்கும் புரட்சிகர இளைஞனைப் பற்றிய கதை.

ஸ்ரீவத்ஸன்

© TamilOnline.com