வாழைப்பழ கேக்
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்
பேகிங் சோடா - 1 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
உப்பில்லாத வெண்ணை - 1/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
லைட் பிரவுன் சர்க்கரை - 1/2 கப்
முட்டை - 1
வாழைப்பழம் - 2 (mashed)
பட்டர் மில்க் - 1/2 கப்
பிஸ்தா (சிறிய துண்டுகள்) - 1/2 கப்

செய்முறை

Ovenஐ 350 டிகிரி Fக்கு சூடு படுத்தவும்.

கேக் பேனின் (cake pan) அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டின் மீது சிறிதளவு வெண்ணையைத் தடவவும். பின்னர் இதன் மீது லேசாக மைதாவைத் தடவவும். மைதா அதிகமாக இருக்கக்கூடாது.

மைதா, பேகிங் சோடா, உப்பு ஆகியவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் நன்றாக கலந்து சலித்தெடுக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் வெண்ணை, சர்க்கரை, லைட் பிரவுன் சர்க்கரை ஆகியவற்றை நன்றாக க்ரீம் பதம் வரும் வரை கிளறவும்.

வாழைப்பழத்தை இதில் இட்டு நன்றாக கிளறவும். நன்றாக beat செய்த முட்டையையும் சேர்த்துக் கிளறவும். சலித்து வைத்த மாவு மற்றும் பட்டர் மில்க் இரண்டையும் மாற்றி மாற்றி இதில் இட்டுக் கிளறவும் (மாவில் தொடங்கி மாவில் முடிக்கவும்).

துண்டு செய்த பிஸ்தாவையும் சேர்த்துக் கிளறவும்.

இந்தக் கலவையை கேக் பேனில் கொட்டி நிறவி விடவும் (கேக் பேனை மெதுவாக தட்டித் தட்டி நிறவவும்). ஸ்பூன் கொண்டு நிறவக்கூடாது.

Ovenல் வைத்து bake செய்யவும். ஒரு டூத் பிக்கை எடுத்து கேக்கின் நடுவில் சொருகி எடுத்தால் டூத் பிக்கில் எதுவும் ஒட்டாமல் இருக்கும் வரை bake செய்யவும்.

பின்னர் எடுத்து ஒரு சில மணி நேரங்கள் ஆறவைத்து பின்னர் கட் செய்யவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com