சிகாகோ புறநகர்ப் பகுதி - தமிழ்ப்பள்ளி
அன்னைத் தமிழை
ஆசையுடனே கற்று மகிழ
இன்றே அழைத்து வருவீர்
ஈன்றெடுத்த செல்வங்களைத்தான்!
உங்களின் மொழியுணர்வு முழுமையாகிட
ஊக்கமுடனேயே சேர்த்திடுவீர் உம்செல்வங்களை!
என்றுமே நினைவினில் கொள்வீர்
''ஏற்றமது சேர்ந்திடும்'' அன்னைமொழி கற்றிடின்!
ஐயமொன்றும் இல்லை
ஒன்றிணைந்து செயலாற்றிடுவோம்
ஓயாத முயற்சி தேவைதான்
களைந்திடோம்! களைத்திடோம்!!

ஆம்! இந்த வாக்குகளை கடந்த 14 ஆண்டுகளாக கூறியது தொடர்ந்து கடந்த செப்டம்பர் 8ம் நாள் 2002 ல் தனது 14வது தமிழ்ப்பள்ளி ஆண்டினை ஆரம்பித்தது. இதில் தமிழ்க்கல்வி கற்று கல்லூரி வாழ்க்கை முடித்து, தன் காலிலேயே நிற்கும் சில இளந்தமிழ் வாரிசுகளும் உண்டு என்ற மகிழ்வு சேர தொடர்கின்றோம்.

தமிழ் மக்கள் பெருவாரியாக அமெரிக்க மண்ணில் குடியேறி சில ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் காலத்து வெள்ளத்தால் அடித்துச் சென்று விட்ட சில ஆண்டுகள் இடைவெளியில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளியின் குறிகோள் கற்க வரும் தமிழ் குழந்தைகளின், சிறார், சிறுமிகள் எண்ணிக்கையைப் பார்த்து பள்ளிகள் நடத்துவ தில்லை நான்கைந்து என்றாலும் தொடருவோம் என்ற திண்மையும், முயற்சியும் இன்று இப்பள்ளியினை தொடர வழிகாட்டியுள்ளது. மூன்று இடங்களுக்கு - கடந்த 14 ஆண்டுகளில் மாறியது என்றாலும், இன்று 40க்குட்பட்ட குழந்தைகள் 4 வயது முதல் 16 வயது வரையும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணிவரை ஆர்வத்துடன் பெற்றோர்களின் அக்கறையான அரவணைப்போடு வருகின்றார்கள். 5 கல் தொலை விலிருந்து, 40 கல் வரை அதிகமான தூரங்களிலி ருந்தும் வருகின்றனர். இந்தப் பள்ளியின் பெரும் பாலான செல்வங்கள் அமெரிக்க மண்ணின் இரண்டாம் தலைமுறைப் பெற்றோர்களின் செல்வங் கள்! தமக்கு தமிழ் கற்றுக்கொள்ள வாய்ப்பு சரிவர அமையாமல் போனதை ஒரு அறைகூவலாக ஏற்றுக் கொண்டு இதனை ஒரு வேள்வியாக செய்யத் தலைப்பட்டுள்ளனர் என்றே கூறலாம். பெற்றோர் களின் ஆர்வத்திற்கு ஈடுகொடுக்கும் அளவில் ஐத் ஆசிரியை, ஆசிரியர்களும் (இரண்டு மாற்று ஆசிரியை களும்) இந்த வேள்வியில் பங்கு கொண்டு வருகின் றனர். ஒவ்வொரு ஆண்டும் 20 வகுப்புக்களைக் கொண்ட இபபள்ளி நான்கு வகுப்பு நிலைகளாகப பகுக்கப்பட்டுள்ளது. ஆரம்பநிலை, முதல்நிலை, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையென அமைந்துள்ள இவ்நிலைகளில் எழுத்துப்பயிற்சியில் பெருத்த கவனமும், பேச்சுப் பயிற்சி, காண்பித்துச் சொல் ஒரு கருவியாகவும், குழந்தைப்பாடல்களுடன் பயனுடன் அமைகின்றன. வள்ளுவரின் வளமான கருத்துக்கள் வகுப்பின் ஆரம்பத்திலும், கடைசியிலும் அமைகின்றன. வீடு சென்றும் பேச்சுத்தமிழை போற்றிச் சொல்ல பெற்றோர்களை நினைவு படுத்துவதும் பள்ளியின் ஆசிரியக்குழுவினரின் கடமையாக அமைந்துள்ளது. இம்மண்ணில் பதிவான இளம் நாற்றுக்களை போற்றி வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

தமிழ் பயிரெல்லாம், காலத்தின் ஓட்டத்தில் முதிர்ந்து தமிழ் மணம்பரப்பும், உள்ளம் நிறைவிக்கும் என்ற நம்பிக்கையும் பெரும் அளவில் உள்ளது.

சிறு அளவிலேயே மனஅமைதி கொண்டுவிடாமல் ஆண்டுதோறும் பெரும் வளர்ச்சிகளை மனதில் கொண்டு செயலாற்றும் பணியில் ஆசிரியர் குழு உள்ளது. உடன் இளம் பெற்றோர்களின ஆர்வம் பேருதவியாகின்றது.

1996ல் அமெரிக்கத் தமிழ் சங்கம் மேற்கொண்ட செயற்திட்டமான ''பல நகர்களில் உள்ளத் தமிழ்ப் பள்ளிகள்'' யாவற்றிற்கும் ஒரேவிதமான கல்விமுறை, தேர்வுகள் என்ற முறை. இடையிலே சுணங்கியது என்றாலும் அதனை மீண்டும் புதுப்பித்து மறுமலர்ச்சி யுடன் திட்டம் நிறைவேற்ற முயற்சிகள் தொடர் கின்றன. காலத்தோடு முன்நோக்கிய திட்டங்களுடன் ''தேமதுரத் தமிழ் ஓசை'' இம்மண்ணில் பல்லாண்டு ஒலித்திட வகை கொள்வோம்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

பள்ளிவிவரங்கள் பற்றி அறிய: thamizppalli@hotmail.com
திரு. முருகேசன் 630 719 1146,
டாக்டர். இளங்கோவன் 708 599 3116
திரு.வ.ச. பாபு 708 599 3116.

ஆசிரியர்கள்
திருமதி. கலைசெல்வி கோபாலன்,
திருமதி. தாரா சந்திரன்,
திரு. முருகேசன்,
திரு. இளங்கோ மற்றும் திரு. பாபு

© TamilOnline.com