‘விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் - சிரிப்பு சபையின்’ (humour club) ‘வாய் விட்டு சிரி!’ நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இரண்டாம் சந்திப்பு நவம்பர் 30ம் தேதி, யூனியன் சிடி நூலகத்தில் நடந்தது. தென்றல் வாசகர்களுக்கு பரிச்சயமான ‘ஸ்ரீகோண்டு’ இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த முறை வந்திருந்த நேயர்கள் பகிர்ந்த ஜோக்குகளில் இருந்து சில:
1. ஏண்டி மீனா, உன் முகத்தில நிறைய பரு இருந்ததே, இப்ப எப்படி இருக்கு?
இப்ப ‘பரு’வாயில்லை கீதா!
2. மாணவி: டீச்சர், நான் உண்மையை பேசுவதால் பிரச்சனை வருமா?
ஆசிரியர்: இல்லை, ஏன்?
மாணவி: நான் நேற்றைய ஹோம்வர்க் பண்ணலை டீச்சர்!
3. ‘B’ எழுத்து ஏன் நடுங்குது?
அது ‘AC’க்கு நடுவே இருப்பதால்!
4. இன்னிக்கு பேப்பர்ல இந்த போட்டோவை பாத்தீங்களா? இந்த ஆள் மின்னல் அடிச்சு இறந்துட்டாராம்.
அது சரி, மின்னல் அடிச்சும் அவர் எப்படி சிரிச்ச முகமா இறந்திருக்கார்?
யாரோ flash அடிச்சதா நினைச் சுட்டாராம்!
5. பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்’னு அம்மா சொன்னதை கேட்டு கல்யாணம் பண்ணது தப்பா போச்சு மச்சி
ஏன்?
என் பொண்டாட்டி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றா!
6. என்னங்க, புது வருசம் ஆரம்பிச்ச திலிருந்து தினமும் காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே, ஏன்?
நீ தானே daily காலண்டர் வாங்கிட்டு வர சொன்னே?!
இந்த நிகழ்ச்சியில் அக்ஷயா, ரஞ்சிதா, ஜீவிதா ஆகிய சிறுமிகள் ஜோக்குகள் சொல்லி நேயர்களை அசத்தினார்கள். ஸ்ரீகோண்டுவும் பல ஜோக்குகள் சொல்லி நேயர்களை சிரிக்க வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வாய் விட்டு சிரித்ததில், நோய் விட்டு போனதோ இல்லையோ - ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை! |