கிருஷ்ணன் என்ற மாணவனின் தந்தை அவனுக்கு 16 வயதில் காலமானார். அவனுடைய அம்மாவிற்கு இருந்த ஒரே வரவு ஓய்வூதியம் தான். 12 வது வகுப்பின் பொதுத் தேர்வில் மிக மிகச் சிறந்த மதிப்பெண் விகிதம் பெற்ற இந்த மாணவனின் படிப்பு, பணப்பற்றாக் குறை காரணமாகத் தடைபட இருந்தது. நல்ல வேளை யாக கிருஷ்ணனின் நிலமை, ஃபெளண்டேஷன் ஃபர் எக்ஸலன்சின் கவனத்திற்கு வந்ததது. கிருஷ்ணன், தகுதியுள்ள மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உதவித் தொகை வழங்கப் பட்டது. கிருஷ்ணன், இப்போது தமிழ்நாடு அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படித்து முடித்து பட்டதாரியாகி விட்டார். பரிமளா என்கிற ஏழை விவசாயியின் மகள் மருத்துவக் கல்வி பெற்று மருத்துவர் ஆனதும், சந்தோஷ் என்கிற ஏழை மாணவன் பொறியாளர் ஆனதும் மற்றும் பல ஏழை மாணவர்களின் வாழ்வில் அற்புதங்களை ஏற்படுத்தி யுள்ளதும் FFE எனப்படும் இந்த ஃபெளண்டேஷன் ஃபர் எக்ஸலன்ஸ் (அ) திறமைக்கு ஊக்கம் தரும் மன்றமாகும்.
கிருஷ்ணன் மட்டுமல்லாது, பரிமளா என்கிற விவசாயி ஒருவரின் மகள் மருத்துவப் பட்டம் பெற்றதும், சந்தோஷ் என்கிற, ரூபாய் 4500 மட்டுமே வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த, ஏழை மாணவன் பொறியியல் பட்டம் பெற்றதும் இந்த மன்றத்தின் உதவியுடன் தான். இது வரையில் சுமார் ஆயிரத்து ஐநூறு மாணவர்கள் தமிழ் நாட்டில் இந்த சங்கத்தின் உதவியுடன், மேற்படிப்பிற்கு சென்று இருக்கிறார்கள். இந்தியா முழுவதிலுமாக, 10,000க்கும் மேற்பட்ட கல்வி உதவித் தொகைகள் வழங்கப் பட்டுள்ளன. அதிலே சுமார், 44 சதவிகிதம் பெண்கள். இந்த ஃபொண்டேஷனின் துவக்க நிதி உதவியாளர்களில் ஒருவரான, திரு.ரேகி என்பவர் கூறுகிறார், “ஒரு ஆண் மகனைப் படிக்க வைத்தால், அது அவனுக்கு மட்டும் கல்வி புகட்டியதாகும். ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால் அது ஒரு வருங்காலக் குடும்பத்தையே படிக்க வைத்ததாகும்.”
1994 ல் அமெரிக்காவில் திரு.பிரபு, பூனம் கோயல் ஆகியவர்களால், ஃபொண்டேஷன் ஃபர் எக்ஸலன்ஸ் நிறுவப்பட்டது. இது ஒரு மத்திய மற்றும் மாநில வரிவிலக்கு பெற்ற நிறுவனம். திரு.கன்வால், ஆன் ரேகி 1999ல் பெரிய அளவு ஆதரவு தந்து இணைந்தார். சமீபத்தில் 2002ல் ரோமேஷ் வாத்வானி நிதி உதவி அளித்து மூன்றாவது முக்கிய ஆதரவாளராகச் சேர்ந்தார். மேலும் பலரின் பண உதவிகளுடன் FFE வளர்ந்து வருகிறது. இது வரையில் சுமார் 2 மில்லியன் டாலருக்குக் குறையாமல் உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளது. சுமார் 10,000 மாணவர்கள், நிதி உதவி பெற்று, மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், கணிஞர்களாகவும், மற்றும் பல தொழிற்துறைகளிலும் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
கல்வி உதவித் தொகை விபரங்கள்:
இந்தியாவில் படிக்கும் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் இந்த பொண்டேஷனின் உதவி நிதியைப் பெற தகுதி பெற்றவர் களாகிறார்கள். நிதி உதவியானது, மாணவர்களின் கல்வித் திறமையின் அடிப்படையிலும், அவர்களின் குடும்ப ஏழ்மை நிலையையும் பொறுத்து அவர்கள் படிக்கும் கல்வியின் அடிப்படையில் வழங்கப் படுகிறது. ஜாதி சமய மற்றும் வேறு எந்தக் காரணங் களுக்காகவும் உதவி நிதி அளிக்கப் படுவதில்லை.
அமெரிக்காவில் விரிகுடாப் பகுதியில் உள்ள சாந்தாக்ளாராவில் ஃபௌண்டெஷனின் முக்கிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள மும்பாயில் கிளை அலுவலகம் ஒன்று உள்ளது. எண்ணற்ற சேவை மனமுள்ள மக்களின் உதவிகளால் இதன் செயற்பாடுகள் நடத்தப்படுகின்றன. அமெரிக் காவில் உள்ள 200 சேவகர்கள், இந்தியாவில் உள்ள 800 உதவியாளர்களுடன் சேர்ந்து தகுதியுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தியா வில் உள்ள உதவியாளர்கள், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று தகுதியான மாணவர்களின் பட்டியலைச் சேகரித்து, அவர்கள் வீட்டிற்குச் சென்று நிதி நிலமைகள் பற்றி அறிந்து, விண்ணப்பங்களை அனுப்ப உதவி செய்வார்கள். வருகின்ற விண்ணப் பங்களில், கல்வி, பொருளாதார மற்றும் அவர்கள் செல்ல இருக்கும் புதிய கல்வி திட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள குழு உதவித் தொகை பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
இந்தியாவில் உயர்நிலை மற்றும் மேற்படிப்பு வகுப்புக்கள் செல்வதற்கு, மிகவும் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. இதனால் அறிவிலும், திறமையிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் பலர், பணப்பற்றாக்குறை உள்ள குடும்பங்களில் இருந்து வருவதால், மேற்கொண்டு படிக்க முடியாமல் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். இந்த நிலமை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் மட்டுமல்லாமல் தனிப்பட்ட மனிதர்களின் பொருளாதார வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கும் தடைக் கல்லாக அமைகிறது. மேலும் பெண்களின் படிப்பு தடைப்படுவது இந்தியா வின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை நெடுங்காலத்திற்கு பாதிக்கும். கல்வி உதவித் தொகை அளித்து அதன் மூலம் அவர்கள் படிப்பை முழுமை செய்தால் அது இந்தியாவிலும், மற்றும் உலக நாடுகளில் எங்கும், சிந்தனை,அறிவு வளம் மற்றும் தொழில் வளத்தைப் பெருகச் செய்யும். பெண்களின் படிப்பு இந்தியாவின் வளர்ச்சிக்குப் பேருதவி செய்யும். இந்தக் காரணங்களால் ஃபௌண்டேஷன் ஃபர் எக்ஸலன்ஸ் அமெரிக்காவில் உள்ள படித்து முன்னுக்கு வந்து அதன் பெருமைகளை உணர்ந்த மக்களின் உதவியுடன் இந்தியாவில் உள்ள ஏழை மாணவர் களுக்கு கல்வி உதவி செய்கிறது.
உதவி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும், சுமார் 6 ஆண்டுகளில், 2000 டாலர்களுக்குக் குறையாமலும், இரண்டு ஆண்டு உயர்நிலைப் பள்ளிக்கு 100 டாலர்களும், நான்காண்டு மருத்துவ மற்றும் பொறி யியல் கல்விக்கு, 450 டாலர்களும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு டாலர் கல்வி உதவித் தொகையும், 60 பங்கு மாணவரின் வருங்கால வருமானத்தை வளரச் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பௌண்டேஷனுக்கு, இந்தியாவிலும், அமெரிக்கா விலும் மக்கள் ஆதரவு மிகவும் அவசியம். கீழ்கண்ட வழிகளில் உதவி செய்ய விரும்புபவர்கள், ஃபௌண்டேஷனை அணுகவும்.
- நிதி திரட்டல்
- பொது அறிவிப்புக்கள், மக்களை அணுகி விவரங்கள் தெரிவித்தல்
- செய்திக் கடிதங்கள் மற்றும் அறிவிப்புக் கடிதங்கள் தயார் செய்தல்
- வலைத்தளத் தயாரிப்புக்கள் செய்தல்
- ஊக்கத் தொகை விண்ணப்பங்களை பரிசீலனை செய்தல்
- கணக்கு மற்றும் அலுவலக உதவி.
விருப்பமுள்ளவர்கள் அணுக வேண்டிய வலைத்தளம்: www.ffe.org. அல்லது, saseshan@ffe.org. ஃபோன்: (408)-985-2001.+ 1850 Warburton Ave., Ste 201, Santa Clara, CA 95050
பாகீரதி சேஷப்பன் |