கார்த்திகை மாதம் 16ம் தேதி 'ஏர்வைன்' நகரத்தில் 'நண்பர்கள் வட்டம்' ஒன்றுகூடி, இக்கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இளம் சமுதாயத்தினருக்கும், சிறுவர், சிறுமி யர்க்கும், தமிழ் கலாசாரத்தில் ஈடுபாடு ஏற்படு வதற்கான ஒரு ஒழுங்காக அமைந்தது. பெரிய அளவிலான விழாவாக இது அமைக்கப்படவில்லை. மாற்றாக பார்வையாளர்கள் பலர் பங்காளர்கள் ஆக்கப்பட்டார்கள். பங்களிப்பு மூலமாக கலாச் சாரத்தில் ஈர்ப்பு ஏற்பட வழி அமைக்கப்பட்டது. வியப்பான விஷயம் என்னவெனில், நிகழ்வுகள் அத்தனையும் தரமானவையாக இருந்தன. திரை மறைவில் நிறைய உழைத்தார்கள் அமைப்புக் குழுவினர். இத்தனை ''இலை மறை காய்கள்'' தென் கலி·போர்னியாவில் ஒளிந்திருக்கின்றனவா என வியந்தனர் பலர்.
தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து, கண்ணன் நடனம், வினோத உடைப் போட்டி என்று பல நிகழ்ச்சிகள். தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன என்று பெரியவரும் சிறுவரும் உரை ஆற்றினார்கள்.
பழைய பாடலா? புதிய பாடலா? சிறந்தது என்று பட்டிமன்றம், நகைச்சுவை கலந்து அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகள் பற்றிய வில்லும்பாட்டு, பேராசையின் கெடுதல் பற்றிய சீரிய நாடகம், தனி மனித நடிப்பு என்று பல நிகழ்வுகள். பல நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
இவர்கள் எப்போது பெரியமேடைக்கு வருவார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.
பிரகாசம் |