தமிழகத்திற்கு உதவ முன் வரும் யூஸ்டன் தமிழர்கள்
யூஸ்டன் மாநகரில் தமிழ்நாடு அறக் கட்டளையின் கிளை தொடங்கும் விழா ஜனவரி 28ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்தியர்களை ஒருங்கிணைப்பதில் புகழ் பெற்ற சாம் கண்ணப்பன் தம் வரவேற் புரையில் பாரதி கலைமன்றமும், தமிழ்நாடு அறக் கட்டளையும் ஒரே வரடத்தில் (1974ல்) தொடங்கப் பெற்றதை நினைவுகூர்ந்தார். தமிழக மக்களின் வளர்ச்சிக்குப் பணியாற்றும் அறக்கட்டளைகள் மற்ற யூஸ்டன் அமைப்பு களும் சேர்ந்து புதிய திட்டங்களை செயலாக்க வேண்டுமென நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் பல அமெரிக்க நகரங்களில் கிளைகள் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளையின் துணைத்தலைவர் சோமலெ சோமசுந்தரம் பில்டெல்பியா, இந்தியானாபோலிஸ் மற்றும் மிக்சிகன் கிளைகள் தற்போது செய்து வரும் பணிகளை விளக்கிப் பேசினார். சீர்காழியில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்ககான புதிய மையம், வேதாரண்யத்தில் கஸ்தூரிபா காந்தி கன்பா குருகுலத்தில் வாழும் அனாதைப் பெண் குழந்தைகளுக்கான வகுப்பறைகள் பற்றிய திட்டங்கள் அவையோரை நெகிழ வைத்தன.

யூஸ்டனில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் அறிஞர் நாக. கணேசன் தமிழ்நாடு அறக் கட்டளையின் யூஸ்டன் கிளைத் தலைவ ராகவும் குமார் கணேசன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழுவில் ராஜாமணி கணேஷ் (செயலாளர்) எஸ்.நாராயணன் (பொருளாளர்), டி. நரசிம்மன், சோஷத்திரி குமார், கரு. மாணிக்கவாசகம், சத்தீஸ்குமார் (உறுப்பினர் கள்) சாம் கண்ணப்பன், ஏ.கே. சுப்பிர மணியன் (கெளரவ ஆலோசகர்கள்) ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.

யூஸ்டனில் உள்ள பல்வேறு அமைப்பு களுடன் சேர்ந்து தமிழ்நாடு அறக்கட்டளை யின் யூஸ்டன்கிளை பணியாற்றி, பிறந்த பொன்னாட்டிற்கு தொண்டு செய்யும் என தலைவர் நாக. கணேசன் தெரிவித்தார். யூஸ்டன் தமிழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: naa.ganesan@gmail.com, (281)648-8636. உங்கள் நகரங்களில் அறக்கட்டளையின் கிளையைத் தொடங்க சோமலெ சோமசுந்தரம் som48346@yahoo.com, (610)444-2628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும்: tnfusa.org

© TamilOnline.com