பிதாமகன்
இந்தப் படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வந்திருந்தாலும், 'பிதாமகன்' படத்தின் துவக்க விழா ஏ.வி.எம் ஸ்டூடியோவில் சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர் பாலா, தனது முந்தைய படங்களான 'சேது' மற்றும் 'நந்தா'வின் கதாநாயகர்கள் விக்ரம் மற்றும் சூர்யாவை முதன் முதலாக இப்படத்தில் இணைத்துள்ளார். கதாநாயகி? 'நந்தா' கதாநாயகி லைலா! கதாநாயகர்களுக்கு ஈடான வேடமான மற்றொரு கதாநாயகி வேடத்திற்கு தகுதியான நடிகையைத் தேடி வருகிறார்கள். வெட்டியானாக நடிக்கிறார் விக்ரம். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் சூர்யா, அவரது நண்பராக நடிக்கிறார். எவர்கிரீன் மூவி இண்டெர்நேஷனல் சார்பாக V.A. துரை தயாரிக்கிறார். இளையராஜாவின் இசையில் வளர்கிறது 'பிதாமகன்'. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிக, நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com