- டிராபிக் போலீஸ்: ஏன் ஆச்சி, விசில் அடிக்கறேனே. திரும்பிக்கூட பார்க்காம போறியே?
ஆச்சி: விசில் அடிச்சா திரும்பிப் பார்க்குற வயசா எனக்கு? ******
- ஏண்டி ரமா, உங்க வீட்டுக்காரர் காலையில் வாசல்ல கோலம் போடறாராமே?
உனக்கு எப்படித்தெரியும் உஷா?
எங்க வீட்டுக்காரர், கோலம் போடச்சே பார்த்தாராம். ******
- நம்ம ரவி ஊருக்கு போறச்சே என்ன ராகத்துல பாட்டு பாடணும் சொல்லு?
பை ரவி
ரவியே சந்தோஷமா ஊருக்குப் போனால்?
ஆனந்த பை ரவி ******
- என்னங்க இன்னிக்கு சீக்கிரம் ஆபிசிலிருந்து வந்துட்டீங்க?
ஓரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கலாமேன்னுதான் ******
- நீ பார்த்திருக்கற பொண்ணு டெலிபோன் ஆபரேட்டர் தான. எதுக்காக அவங்க மரியாத தெரியாம பேசுவா, வேண்டாம்னு சொல்லிட்ட?
அவ கால் மேல கால் போட்டு பேசுவாளாம். ******
- இந்த கடல் அலைகளுக்குக்கூட பேசாம MLA ன்னு பேர் வெக்கலாம் போலிருக்கு?
ஏன்?
எப்பயாவது ஒரு தடவைதான் கரைப் பக்கமே வருது பாரு.
****** |