காய்கறி கடையில் என்னங்க தனியா சிரிக்கிறீங்க?
இல்ல, அந்த அம்மா வாங்கிப் போற greeting card ல என்ன எழுதியிருக்கு பாரு.
You are the only one in my life அப்படின்னு போட்டிருக்கு. அதுக்கு என்னங்க.
அதமாதிரி மூணு கார்டு வாங்கிட்டுப்போறாங்க.
******
உங்க வீட்டில தமிழ் டிவி சானல் வந்ததுக்கு அப்புறம்தான் உன் பையன் தமிழ்ல பேச முயற்சி பண்றான்னு சொன்னியே. இப்ப என்னாச்சு?
அதுல வர்ற சில நிகழ்ச்சித் தொகுப்பாளர் மாதிரி, வேற தமில்ல இல்ல பேசறான். அதுவுமில்லாம, அவனோட ஹோம் வொர்க் எல்லாம் நான் செய்ய வேண்டியதாப் போச்சு.
******
என்னங்க, நம்ம பொண்ணு காவேரிக்கு பெங்களூரில பார்த்திருக்கிற வரனுக்கு, அதான் அந்த பையன் கிருஷ்ணாவுக்கு மொதல்ல ஓகே சொன்னீங்க. இப்ப வேண்டாங்கறீங்க.
ஆமாம், கல்யாணத்துக்குப்புறம், நமக்கு வேணுங் கறச்சே நம்ம பொண்ண, பையன் வீட்டிலேருந்து அனுப்ப மாட்டேம்பாங்க. யாரு மல்லுக்கு நிக்கற துன்னுதான்.
******
ஏர்ஹோஸ்டஸ் பயணி ஒருவரிடம்:
நீங்கள் இந்தப் பெரிய பையினை செக்கிங் செய்திருக்கவேண்டும்
வேற ஏர்லைன்ஸ¤ல போயிருந்தா எனக்கு இது போலப் பிரச்சனை எதுவும் இருந்திருக்காது. எல்லாம் என் நேரம்
அப்படியா. ஒரு வேள அப்படி செய்திருந்தா, எனக்கு கூடத்தான் பிரச்சனை இல்லை!!
******
நண்பரின் மனைவி, வந்திருக்கும் விருந்தாளியிடம்
என்ன உங்க பையனுக்கு art பிராஜக்டுல எல்லாம் நிறைய ஆர்வம் போலயிருக்கே. கலர் கலரா வரைஞ்சிருக்கான்.
ஆமாம், பள்ளிக்கூடத்தில எல்லாம், அவனுக்கு நிறைய பாராட்டு கிடைச்சிருக்கு. ஆமாம் உங்களுக்கு எப்படித் தெரியும்.
இல்ல, எங்க வீட்டுக்கு வந்து இன்னும் சிறிது நேரம் கூட ஆகல. சுவத்தில எல்லாம் வரைஞ்சி தள்ளிட்டான்.
******
என்னடா, உனக்கு உங்க அம்மா ஊருல பொண்ணு பார்த்துக்கொண்டு இருந்தாங்களே, என்னாச்சு?
நம்ம எக்கானமி இங்க கண்ணாமூச்சி ஆடறதுனால, இண்டெர்வியுல கேக்கறமாதிரி ரொம்பதான் கேள்வி கேக்கறாங்களாம்.
******
விசா எத்தனை நாள், கம்பெனி எத்தனை நாள், பிராஜக்ட் எத்தனை நாள், போன ஒரு வருசத்தில எத்தனை நாள் பெஞ்சுல இருக்கவேண்டிவந்தது, survival strategy என்ன... கம்பெனியோட Balance Sheet கண்டிப்பாக காட்டணுமாம்,. இதனால கொஞ்ச நாளைக்கு எங்கம்மா எல்லாத்தையும் மூட்டைக்கட்டி வச்சுட்டாங்கடா.
ஸ்ரீகோண்டு |