ஹாரிஸ்பர்க், பென்சில்வேனியாவில் தியாகராஜ ஆராதனை விழா
கடந்த ஜனவரி மாதம் பதின்மூன்றாம் நாள், சனிக்கிழமை ஹாரிஸ்பர்கிலுள்ள H.A.R.I (Hindu American Religious Institution) கோவிலில் தனது நான்காவது ஆண்டு தியாகராஜ ஆராதனை விழா சிறப்புற நடைபெற்றது.

சுற்றிலும் உள்ள லன்காஸ்டர், டெலவேர், ரெட்டிங் மற்றும் பிலடெல்பியா நகரங்களி லிருந்து பாடகர்கள் பங்கேற்க வந்திருந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். சங்கீத ஆசிரிய / ஆசிரியைகள் தங்கள் மாணவர்களைப் பயிற்றுவித்து பாட வைத்தனர். பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் குழுப்பாடல்களும் தனிப் பாடகர்களின் மேலான இசையுமாக களைகட்டிய இவ்விழா, அறுசுவை விருந்து டன் இனிதே நிறைந்தது.

மேலும் விவரங்களுக்கு: www.haritemple.org

மீனா ரவி, ஹாரிஸ்பர்க்.

© TamilOnline.com