சென்னையில் இருந்து ஊஸ்டனில் உள்ள என் பையன் வீட்டிற்கு வந்தேன். அங்கு உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். கோயில் நன்றாகயிருந்தது. அங்கு பெரிய லைப்பரரி இருக்கிறது. அதில் பொன்னியின் செல்வன், சிலப்பதிகாரம் மற்றும் பெரிய எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள், குங்குமம், ஆனந்தவிகடன், கல்கி, மங்கையர்மலர் இன்னும் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. லைப்பரரியில் என் பையன் மெம்பராக இருந்ததால் நான் 10, 15 புத்தகங்கள் எடுத்து வந்தேன். மூன்று மாதம் போவது தெரியாமல் போனது.
சென்னைமாதிரி எதிர்வீடு, பக்கத்துவீட்டு மனிதர்கள் என்று பழகும் வாய்ப்பு இங்கு இல்லை. இந்த நிலைமையில் சான்பிரான்ஸ்கோவிற்கு மிகவும் தெரிந்தவர்கள் வீட்டுக்கு வந்தேன்.
அவர்கள் இங்கு உள்ள முருகன் கோயில், பெருமாள் கோயிலுக்கு அழைத்து சென்றார்கள். இங்கு லைப்பரரி இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்று சொன்னார்கள்.
பெண் பிள்ளை வீடு என்று இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரும் பெற்றோர்களுக்கு இங்கு எல்லா கோயில்களிலும் லைப்பரரி இருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
N. துரைக்கண் |