அவசர வாழ்க்கைக்கு திடீர் பொடிகள்
சாம்பார் செய்யும் பொழுது 'சாம்பார் பொடி' போட்டு சமைப்பது பலவீடுகளில் வழக்கம். சிலர் ரசப்பொடி, கறிப்பொடி என்று ரசம், கறி ஆகியவற்றிற்கும் தனியாக பொடி செய்து வைத்துக் கொள்வார்கள்.

கூட்டு, பொறித்த குழம்பு ஆகியவற்றிற்கும் அதே போல் பொடி செய்து வைத்துக் கொண்டால் மிக்ஸியில் அரைக்கும் வேலை மிச்சம். தவிர தேங்காய் இந்தியாவில் மலிவாய் கிடைப்பதால், இந்த பொடிகளை இந்தியாவில் செய்து, (கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு) எடுத்து வரலாம். பல மாதங்களுக்கு கெடாமல் இருக்கும்.

கூட்டு பொடி

தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1 கரண்டி
பெருங்காயம் - 4 ஸ்பூன்
கொப்பரை - 1 மூடி
தனியா - 2 கரண்டி
மிளகாய் வற்றல் - 6-10

செய்முறை

கொப்பரையை சீவவும். மற்ற சாமான்களை எண்ணெய்யில் நன்கு வறுக்கவும்.

மிக்ஸியில் வறுத்த சாமான்களுடன் கொப்பரையை சேர்த்து பொடி செய்யவும்.

துவரம் பருப்பு சேர்க்கும் கூட்டுக்கு கறிக்கு பயன்படுத்தலாம்.

மைதிலி துரைசுவாமி

© TamilOnline.com