வாழைக்காய் பொடி
தஞ்சாவூர் ஜில்லாவில் பல தனித்துவம் மிக்க உணவு வகைகள் உண்டு. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு என்று வாழை மரத்தின் எல்லா பாகங்களும் சமையலில் பயன்படுத்தபபடும். வாழைக்காய் பொடி நாவையும் வயிற்றையும் மட்டுமல்லாது மனத்தையும் நிறைக்கும்.

தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1
மிளகாய் வற்றல் - 2-4
பெருங்காயம் - சிறு துண்டு
எண்ணெய் - 1 கரண்டி
சீரகம் - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாழைக்காயை தோல் சீவவும். பின்பு பொடியாக நறுக்கவும். (தோலுடன் சுட்டு, தோலை உரித்து நறுக்கலாம்)

எண்ணெயில் பெருங்காயம், சீரகம், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை பொன்நிறமாக வறுக்கவும்.

பிறகு இதை மிக்ஸியில் உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

எண்ணெய்யில் வாழைக்காயை வேகும் வரை வதக்கவும்.

மிக்ஸியில் லேசாக ஒரு அடி வதக்கிய வாழைக் காயை அடித்து, பொடி செய்த சாமன்களுடன் சேர்க்கவும்.

வாழைக்காயை சுட்டு செய்தால் அதிகம் காணாது.

ஜானகி சுப்ரமணியன்

© TamilOnline.com