தேவையான பொருட்கள் சேப்பங் கிழங்கு - 150 கிராம் சேனைக் கிழங்கு - 150 கிராம் வாழைக்காய் - 2 முருங்கைக் காய் - 2 அவரைக் காய் - 10 கொத்தவரை - 20 உருளைக் கிழங்கு - 1 சற்றே புளிப்பான தயிர் - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 5 எள் - 2 ஸ்பூன் துருவிய தேங்காய் - 1/2 கிண்ணம் அரிசி மாவு - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேங்காய், பச்சை மிளகாய், அரிசி மாவு, எள் ஆகியவற்றை ஒன்றாக இட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும். இதில் தயிர் சேர்த்து நன்றாகக் கிளறி எடுத்து வைக்கவும்.
காய்கறிகளைத் தோல் நீக்கி, 1 இஞ்ச் அளவுக்கு வெட்டிக்கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கறிகளை பிரஷர் பேனில் மூடி போட்டு வெயிட் போடாமல் வேக வைக்கவும்.
ஒரு ஸ்பூன் எண்ணையை வாணலியில் இட்டு சூடு படுத்தி கறிவேப்பிலையைப் பொரிக்கவும். தேங்காய்க் கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
வேக வைத்த காய்கறிகளை இதில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணை மற்று தயிர் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
சரஸ்வதி தியாகராஜன் |