தேவையான பொருட்கள் சாதம் - 2 கிண்ணம் யோகர்ட் அல்லது வீட்டுத் தயிர் - 2 கிண்ணம் பால் - 1/4 கிண்ணம் உப்பு - தேவையான அளவு திராட்சை - 15 முந்திரி - 10 கடுகு - 1 ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு நறுக்கிய பச்சை மிளகாய் - 1 ஸ்பூன் தோல் சீவி ய வெள்ளரி - 1/8 கிண்ணம் தோல் சீவி ய காரட் - 1/8 கிண்ணம் எண்ணை - 1 ஸ்பூன் நறுக்கிய இஞ்சி - 1 துண்டு
செய்முறை
எண்ணையைச் சூடு படுத்தி, கடுகை பொரிக்கவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய், இஞ்சி, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். சாத்தில் தயிர் மற்றும் பாலை விட்டு நன்றாகக் கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். பின்னர் வறுத்துவைத்த பொருட்கள், திராட்சை, வெள்ளரி மற்றும் காரட் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
சரஸ்வதி தியாகராஜன் |