மாட்டுப் பொங்கல் - தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
சாதம் - 2 கிண்ணம்
துருவிய தேங்காய் - 1/2 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
முந்திரி - 10
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் எண்ணை - 3 ஸ்பூன்
(அல்லது ஏதேனும் ஒரு சமையல் எண்ணை)
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணை - வறுப்பதற்கு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

சாதத்தை ஒரு தட்டில் கொட்டிப் பரப்பி, ஆற விடவும்.

வாணலியில் எண்ணையைக் காய்ச்சி, கடுகைச் சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் கிள்ளிய மிளகாய் வற்றல், பெருங்காயம், உளுத்தம் பருப்பு மற்றும் முந்திரி சேர்க்கவும். முந்திரி பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.

கறிவேப்பிலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, தேங்காய் லைட் பிரவுனாக மாறும் வரை வறுக்கவும்.

தேவையான அளவு உப்பு, மற்றும் வறுத்து வைத்த தேங்காய்த் துருவல் கலவையைச் சாதத்தோடு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com