மாட்டுப் பொங்கல் - புளியஞ்சாதம்
தேவையான பொருட்கள்
புளிக்காய்ச்சல்
வேகவைத்து ஆறிய சாதம் - 3 கிண்ணம்
கட்டியான புளி கரைசல் - 2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 12
சன்னா - 1/8 கிண்ணம்
வேர்கடலை - 1/8 கிண்ணம்
கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு பிடி
நல்லெண்ணை - 1/3 கிண்ணம்
தனியா - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
ஜீரகம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்

செய்முறை

மிளகு, ஜீரகம், வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணை விடாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணை விட்டு கடுகு, மிளகாய் சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் கடலைப் பருப்பு, சன்னா மற்றும் வேர்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

மஞ்சள் பொடி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் புளி கரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணை மேலே மிதக்கும் வரை கொதிக்க விடவும்.

அரைத்து வைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். சாதத்தை ஒரு அகலமான பேசினில் போடவும். தேவையான அளவு புளிக்காய்ச்சலைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். தேவையெனில் சிறிதளவு நல்லெண்ணை சேர்க்கவும். இது ஊற ஊறத்தான் சுவை.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com