பொங்கல் - பொங்கல் குழம்பு
தேவையான பொருட்கள்
காய்கறிகள்
வாழைக்காய் - 1
பூசணிக்காய் - சிறிய துண்டு
உருளைக் கிழங்கு - 1
காரட் - 1
சர்க்கரை வள்ளி
(Sweet potato) - 1
சேனைக் கிழங்கு - சிறிய துண்டு
சேப்பங் கிழங்கு - 4
மேற்கூறிய காய்கறிகளின் மேல் தோலைச் சீவி, நன்றாக வேக விட்டு எடுத்து வைக்கவும்.
பீன்ஸ் - 10
பச்சை மிளகாய் - 5
மொச்சை - ஒரு கைப்பிடி
(உலர்ந்த பருப்பு என்றால் முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்)
அவரைக் காய் - 10
இந்தக் காய்களையும் வேக வைத்து எடுத்து வைக்கவும்.
துவரம் பருப்பு - 2 கிண்ணம்
புளித் தண்ணீர் - 3 கிண்ணம்
(அல்லது இன்ஸ்டன்ட் புளி பேஸ்ட் 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்தது)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
கொத்துமல்லை,
கறிவேப்பிலை - ஒரு பிடி
சாம்பார் பொடிக்குத் தேவையான பொருட்கள்
மிளகாய் வற்றல் - 10
தனியா - 2 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
ஜீரகம் - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
இவை அனைத்தையும் எண்ணையில் வறுத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை

புளித் தண்ணீரை அடி கனமான பாத்திரத்தில் இட்டு, மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இது கொதித்தப் பிறகு, வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். சாம்பார் பொடி, பெருங்காயம் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்து இதில் சேர்க்கவும்.

இறுதியாக கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com