தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம் பச்சை மிளகாய் - 5 மிளகு - 1 ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - 10 எண்ணை - தேவையான அளவு
செய்முறை
உளுத்தம் பருப்பை நன்றாகக் கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
சிறிதளவே தண்ணீர் சேர்த்து மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலியில் எண்ணையை நன்றாகக் காய்ச்சவும்.
எலுமிச்சை அளவு அரைத்த மாவை எடுத்து கையில் வட்ட வடிவில் தட்டவும். இதன் நடுவில் சிறிய துளை போட்டு எண்ணையில் இட்டு இரு புறமும் பொன்னிறமாகச் சிவக்கும் படி பொறித்தெடுக்கவும். அதிக எண்ணையை வடிகட்டவும்.
சரஸ்வதி தியாகராஜன் |