தேவையானப் பொருட்கள் பச்சரிசி - 2 கிண்ணம் பயத்தம் பருப்பு - 1/4 கிண்ணம் பால் - 2 கிண்ணம் தண்ணீர் - 2 கிண்ணம் பொடி செய்த வெல்லம் - 3 1/2 கிண்ணம் நெய் - 1/4 கிண்ணம் முந்திரி - 15 திராட்சை - 2 ஸ்பூன் ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
செய்முறை
அரிசி மற்றும் பயத்தம் பருப்பை தனித்தனியே தொட்டால் சுடும் அளவுக்கு வறுத்துக்கொள்ளவும். அரிசி, பருப்பு ஆகியவற்றை 2 கிண்ணம் பால் மற்றும் 2 கிண்ணம் தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக வேக வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தி, வெல்லம் கரைந்து பாகு பக்குவம் வரும் வரை வைக்கவும்.
பின்னர் வேகவைத்த அரிசி, பருப்பு மற்றும் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும்.
சரஸ்வதி தியாகராஜன் |