பொங்கல் - வெண் பொங்கல்
தேவையான பொருட்கள்
அரிசி - 1 1/2 கிண்ணம்
பயத்தம் பருப்பு - 1/2 கிண்ணம்
தண்ணீர் - 5 கிண்ணம்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 3 ஸ்பூன்
முந்திரி - 12
கருப்பு மிளகு - 1 ஸ்பூன்
ஜீரகம் - 1 ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்

செய்முறை

மிளகு, ஜீரகத்தை ரவை பதத்திற்கு பொடி செய்யவும்.

அரிசி மற்றும் பயத்தம் பருப்பை தனித்தனியே தொட்டால் சுடும் அளவுக்கு வறுத்துக்கொள்ளவும்.

அரிசி, பருப்பு, மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 கிண்ணம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும். முதல் விசில் வந்தவுடம் அடுப்பை சிம்மரில் வைத்து மேலும் 5 நிமிடம் வேக வைக்கவும்.

குக்கரிலிருந்து எடுத்து ஒரு கரண்டியால் லேசாகக் குழையும் படி கிளறவும்.

நெய்யைச் சூடு படுத்தி மிளகு ஜீரகப் பொடி மற்றும் முந்திரியை வறுக்கவும். பின்னர் கறுவேப்பிலை மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து சிறிது வறுக்கவும்.

வேக வைத்த அரிசி, பருப்பில் இதனைக் கொட்டி நன்றாகக் கிளறவும். தேவையெனில் இன்னும் கொஞ்சம் நெய் விட்டுக் கிளறவும்.

சூடாக இருக்கும் போதே சாப்பிடவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com