போகி - பருப்பு வடை (ஆம வடை)
தேவையானப் பொருட்கள்

கடலை பருப்பு - 1 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
பச்சை அல்லது
காய்ந்த மிளகாய் - 8
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணை - பொறிப்பதற்கு

செய்முறை

பருப்பு வகைகளை நன்றாகக் கழுவி, 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடிக்கவும்.

மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து ஊறிய பருப்பினை அரைக்கவும் (விழுதாக இல்லாமல் கொறகொறவென்று) அரைத்த மாவில் கறுவேப் பிலை சேர்த்துக் கிளறவும்.

இந்தக் கலவையிலிருந்து ஒரு பெரிய எலுமிச்சை அளவுக்கு எடுத்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து தட்டவும். பொன்னிறமாக மாறும் வரை பொறிக்கவும். அதிக எண்ணையை வடிகட்டவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com