கர்நாடக சங்கீத ரசிக, ரசிகைகளிடையே 15 வருடங்களாக முதல் இடம் வகித்துக் கொண்டி ருக்கும் குரல் எது எனக் கேட்டால், உடனே வரும் பதில் திருமதி சுதா ரகுநாதனின் குரல்தான். தமது 9வது வயது முதல் தம் தாயார் திருமதி. தாயார் திருமதி. சூடாமணியிடம் சங்கீதம் கற்க ஆரம்பித்து பின் திரு. B.V. லக்ஷமணன் அவர்களிடமும், எம்.எல். வசந்தகுமாரியின் பிரதான சிஷ்யையாகவும் உருவெடுத்திருக்கும் இவர் கச்சேரிகள் செய்த நாடுகளின் எண்ணிக்கையைவிட கச்சேரி நடத்தாத நாடுகளின் எண்ணிக்கைதான் குறைவு.
பல சபாக்களில் சென்னைவாழ் மக்களை 'இசைவிழாவில்' பாடியபடி மகிழ்வித்துக் கொண்டி ருக்கும் பிஸியான நேரத்தில் திருமதி. சுதா ரகுநாதன் இதோ 'தென்றல்' வாசக வாசகிகளையும் தம் இனிய பேட்டியின் மூலம் மகிழ்ச்சி கொள்ள செய்துவிட்டார்.
இவ்வளவு பிஸியான சீசனிலும் தென்றலுக்கென பேட்டிக் கொடுக்க ஒப்புக்கொண்ட உங்களுக்கு மிக்க நன்றி. இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையிலும் எப்படி இவ்வளவு பளிச்சென்று இருக்க முடிகிறது?
எப்பொழுதும் சிரித்துக்கொண்டு பளிச்சென்று இருப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். கடவுள் கொடுத்த மிகப் பெரிய வரப்பிராசதமாக என் குடும்பத்தினரும், என்னை சுற்றி இருப்பவர்களும் positive people ஆக இருக்கிறார்கள். ஏதாவது ஒரு சின்ன மனக்கஷ்டம் வந்தால்கூட அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். சிறிது நேரத்திற்க்கெல்லாம் உற்சாகமாயிடுவேன். எந்த ஒரு வருத்தமுமே என்னை ரொம்ப நேரம் பாதிக்கும்படி வைத்துக் கொள்ளமாட்டேன். சிறிது நேரத்திற்கெல்லாம் உற்சாகமாயிடுவேன். எந்த ஒரு வருத்தமுமே என்னை ரொம்பநேரம் பாதிக்கும்படி வைத்துக் கொள்ள மாட்டேன். சந்தோஷமாக இருப்பதும், சோகமாக இருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. 'Life is short, but life is beautiful' என தினம் தினம் எண்ணிக்கொண்டு எப்பொழுதும் நான் உற்சாகமாக இருப்பேன்.
என்னோட friends நிறைய பேர் அப்பப்போ மனப்பாரத்துடன் போன் பண்ணி எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் உங்களுக்கு போன் பண்ணினேன்னு சொல்வார்கள். 5 நிமிடம் போன்ல பேசினப்பறம் டல் ஆக இருந்த என்னை சீயர்புல்லாக ஆக்கியதற்கு ரொம்ப தேங்ஸ்ன்னு சொல்லி போன் ஐ வைப்பார்கள். நாமளும் மகிழ்ச்சியா இருக்கணும். நம்மள சுற்றி இருப்பவர் களையும் மகிழ்ச்சியாக வெச்சிருக்கணும்னு நான் எப்பவும் நினைச்சுப்பேன்.
Busy Personality- ஆக இருக்கும் உங்களால், உங்கள் குடும்பத்தை எப்படி கவனித்துக் கொள்ள முடிகிறது? குறிப்பாக, உங்கள் குழந்தைகள்?
குழந்தைகள் வளர்ப்பு என்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. எனது மகன் கெளசிக்கிற்கு இப்பொழுது 17 வயது. மகள் மாளவிக்காவிற்கு 11 வயது ஆகிறது. இவர்கள் 3 வயது சிறுவர் சிறுமியர்களாக இருக்கும் போது நான் கச்சேரி கிளம்பும் சமயம் அழுவார்கள். மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். என் கணவர் எனக்கு பெரிதும் ஆதரவாக இருந்து குழந்தைகளை சமாதானப்படுத்துவார்கள். சில நாட்கள் ரொம்ப tight schedule ஆக இருக்கும். 15 நாட்கள் நான் வெளியூரில் concert முடிந்து காலைதான் சென்னை வந்திருப்பேன். ஆனால் மாலை மறுபடியும் concertக்கு செல்லும்படி ஆகிவிடும். அந்த மாதிரி சமயங்களில் குழந்தைகள் ரொம்பவே வருத்தப்படுவார்கள். அவர்கள் adaptive children ஆக வளர்ந்து விட்டார்கள். அம்மாவின் profession பாடுவது அதனால் அவள் அடிக்கடி கச்சேரி செய்ய போகவேண்டும் என அவர்கள் புரிந்துகொண்டு எனக்கு மிகவும் ஒத்துழைப்பு தருகிறார்கள். நான் என் குழந்தைகளுடன் சிறிது நேரமே கழித்தாலும், அதை சிறப்பாக கழிப்பதில் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்வேன்.
ஒவ்வொரு கச்சேரியிலும் புதுசு புதுசா பாட்டு பாடறது உங்களோட speciality ஆக இருக்கு... அதெப்படி பாட முடியறது?
CDs மற்றும் Audio cassetteகள் வழியாக பல வித்வான்கள் பாடிய பாடல்களை கேட்டு, அவற்றை என் ஸ்டைலுக்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொண்டு புதிய பாடல்களை கற்றுக் கொள்கிறேன்.
தினம் சாதகம் பண்ணுவீர்களா?
ம்ஹும். தினம் எல்லாம் சாதகம் செய்யமாட்டேன். மனைவியாக, அம்மாவாக, மாட்டுப்பொண்ணாக, இப்படி பல கடமைகள் இருப்பதால், பாட்டுபாடவென தனியாக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், மனதில் எப்பொழுதும் ஏதாவது பாட்டு ஓடிக் கொண்டே இருக்கும். சமைத்துக் கொண்டே பாடல் பயிற்சி செய்வேன். என்னிக்காவது 2 மணிநேரம் பாடனும்னு நினைத்து உட்காரும்பொழுதெல்லாம் பல சமயம் யாராவது guest வந்துவிடுவார்கள். so, அப்படி இப்படி என நேரம் ஓடி விடுகிறது.
சமீபத்தில், New Jersey-ல் உங்கள் கச்சேரியைக் கேட்டு ரசித்தேன். கச்சேரியோடு நீங்கள் தலையில் வைத்திருந்த மல்லிகைப்பூவைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை. இவங்களுக்கு மட்டும் எங்கிருந்து மல்லிப்பூ கிடைச்சதுன்னு கூட்டத்துக்குள் ஒரே சலசலப்பு... என்னிடம் பலர் உங்களுக்கு எந்த Indian storesல மல்லிப்பூ கிடைச்சதுன்னு கேட்க சொன்னார்கள்? so, அதனால் நியூஜெர்சி வாழ் தமிழர்கள் சார்பாக அந்த மல்லிப்பூ ரகசியத்தை சொல்லுங்களேன்?
ரகசியம் ஒண்ணுமேயில்லை... கூட்டத்திலேர்ந்து பார்த்தால் அது நிஜமல்லிப் பூ போல் இருந்திருக் கலாம். நான் வைத்திருந்தது பேப்பர் மல்லிப்பூ. வெளிநாட்டு கச்சேரிக்கு செல்லும்போது தலையில் மல்லிப்பூவுடன் செல்வது ஒரு புதுப்பொலிவை தருகிறது. பல வெளிநாட்டுக்காரர்கள் நான் தலையில் வைத்திருக்கும் மல்லிப்பூவை மிக ஆர்வமாக பார்த்து ரசிப்பார்கள்...
'ஆசைப்படு பெண்ணே ஆசைபடு' என்று டிவி சிரியலுக்காக நீங்க பாடும் பாட்டு ரொம்பவே பிரபலமாகி இருக்கு... உங்களோட ஆசை என்னென்ன?
சின்னசின்ன ஆசைலேர்ந்து பெரிய பெரிய ஆசைகள் வரை நிறைய இருக்கு. மியூசிக்ல நிறைய புதுமைகள் பண்ணனும்னு ஆசை. ஆனால் இருப் பதோ இருபத்து நான்கு மணிநேரம் தானே. அதனால், எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்க முடிவதில்லை.
உங்கள் மகள் தான் உங்கள் இசை வாரிசா?
தெரியல... அவளுக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும். ரொம்ப நல்லா கவிதை எழுதுவா... கிரியேட்டிவ் விட்டி ரொம்ப ஜாஸ்தி. நான் அவங்களுக்கு full freedom குடுத்து வளர்க்கறேன்... அவங்க இஷ்டப்படி எந்த fieldல போனாலும் I will be more happy...
உங்கள் மகனைப் பற்றி?
என் மகன் ஒரு great poet. ரொம்ப நல்லா poems எழுதுவான். அவன் use பண்ற language ரொம்ப profound ஆகவும் strong ஆகவும் இருக்கு... ஆச்சரியமா இருக்கு...
சங்கீதத்தை தவிர உங்களது hobbies?
நான் நிறைய படிப்பேன்... கவிதைகள் எழுதுவேன்... கவிதைகள்னு plan பண்ணி எழுதமாட்டேன். யாருக்காவது லெட்டர் எழுதும்போது கூட அதை ஒரு கவிதை நடைல எழுதுவேன். நான் எழுதிய, எழுதற கவிதைகள் காப்பிகள் எல்லாம் வெச்சுக்கற தில்லை... just அப்படியே எழுதிடுவேன்... poem is a good way to express our emotions ன்னு நினைக்கிறேன்...
உங்கள் இனிமையான குரலை எப்படி பராமரிக்கிறீர்கள்?
concert இருக்கும் நாட்களில் அதிகம் பேச மாட்டேன்... cold items எதுவும் ரொம்ப சாப்பிடமாட்டேன். மற்றப்படி வேற எதுவும் special ஆக செய்துக் கொள்வதில்லை...
உங்களது New Year Resolution என்ன?
New Year Resolution - எந்த ஒரு விஷயத்தையும் உடனுக்குடன் செய்து முடித்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அப்புறம் பார்த்துக்கலாம்... அப்புறம் செய்யலாம் என எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போட போவதில்லை...
உங்களது Newyear resolution வெற்றிகரமாக நிறைவேறவும், இந்த வருடம் உங்களுக்கு பல வெற்றிகளை வாரிதரும் ஒரு வருடமாக அமைய தென்றல் வாழ்த்துகிறது...
அமெரிக்கா வாழ் தமிழ் மக்களுக்கும் தென்றல் வாசக வாசகியர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
******
Solitude... an Experience
The soft wind sweeps through the trees,
The boughs swaying to it's tunes,
In silence I watched the bees,
Buzzing away into their dunes,
Younder there... what a sight to see,
The green grass stretching beyound vision,
Silence whispers into my ears,
I looked up into the sky in tears,
"Nature... they beauty silences my spirit,
Why doth thee create man,
Man in all his animosity,
forgotten words peace and transquility",
Visions of thy beauty forever shall I praise,
Glimpses of thy majesty forever shall I rejoice,
The music refreshing to the ears,
Ununderstandable it is to me,
To thy serenade my heart leaps,
Boundless is my joy,
Enticing visions seem to vanish,
I crave for those sights in futility,
Those that disappear into darkness,
Fading away in my midnight sleep,
Awakening to the sunlight bliss......
Kaushik Ragunathan
சந்திப்பு: நளினி சம்பத்குமார் |