வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற பொங்கல் விழா
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 26 ஆண்டு கால வழக்கத்தின் தொடர்ச்சியாக தைத் திங்களை வரவேற்கும் விதத்தில் தமிழர்களின் பெருவிழாவான பொங்கல் திருநாளை, மக்கள் பெரிதும் விரும்பும் புகழ் பெற்ற தமிழ்ச் சான்றோர்கள் தலைமையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. இவ்விழா மார்கழித் திங்கள் 29ஆம் நாள் (சனவரி 13, 2007) சனிக்கிழமை பிற்பகலில் கோம்ஸ் துவக்கப் பள்ளி அரங்கத்தில் இனிதே நடந்தேறியது.

தமிழ்த் தாய் வாழ்த்தை தொடர்ந்து திருமதி பத்மா ராஜகோபால் அவர்களின் தமிழிசை யோடு நிகழ்ச்சி துவங்கியது. தேவாரம், திருப்பாவை மற்றும் திருப்புகழ் பாடல்களுக்கு திரு நடராஜன் அவர்களின் மிருதங்க இசையும், திருமதி கீதா சேஷாத்திரி அவர்களின் வயலின் இசையும் மேலும் மெருகூட்டியது. மனதை உருக வைத்த அப்பக்தி பாடல்களில் அனைவரும் பரவசமடைந்ததை உணர முடிந்தது. இதை தொடர்ந்து திருமதி அஜீதா சிவம் அவர்கள் ஓவாரணம் ஆயிரம்ஔ என்ற திருப்பாவை பாடலுக்கு அனைவரும் வியக்கும்படி நடனமாடி அரங்கத்தின் ஆரவார பாராட்டைப் பெற்றார்.

அடுத்து சிறப்பு கவியரங்கம், ஓசாகித்திய அகடெமிஔ விருது பெற்ற கவிஞர் மு. மேத்தா அவர்களின் தலைமையில் துவங்கியது. புதுக்கவிதை மன்னர் மு. மேத்தா அவர்கள் ஓஇலக்கியப் பெண்டிர்ஔ என்கிற கவியரங்க தலைப்பை அறிமுகப்படுத்தி பேருரை ஆற்றினார். பெரும் கவிஞர் மு. மேத்தா அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடந்தது தமிழ் மன்றத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அவர்களின் தலைமையில் கவிபாடிய நமது தோழர்களான, திரு திருமாறன், திரு ஜெயக்குமார் முத்தழகு, திரு கந்தசாமி பழனிச்சாமி, திரு டில்லி துரை மற்றும் திரு லேணா கண்ணப்பன் ஆகிய அனைவரும் பெருமை அடைந்தனர். இவர்கள் கவித்திறமையை அரங்கத்தில் இருந்த அனைவரும் வியந்து பாராட்டினர். திரு மு. மேத்தா அவர்களுக்கு தமிழ் மன்றத்தின் சார்பாக பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.

கவியரங்கத்தை அடுத்து, தமிழ் மன்ற வளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வளைகுடாப் பகுதியில் அரிய தமிழ்த் தொண்டாற்றி வரும் மன்றத்தின் முன்னாள் தலைவரும், தமிழ் பண்பாட்டு மையத்தின் இயக்குனருமான திரு சிவகுமார் சேஷப்பன் அவர்களைப் பாராட்டி தமிழ் மன்றத்தின் சார்பாக கவிஞர் மு. மேத்தா அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.

அடுத்து அரங்கத்தை அதிரவைத்தது சிறப்பு பட்டிமன்றம். அனைவரையும் கவர்ந்த நடுவர் திருமதி உமையாள் முத்து அவர்களின் தலைமையில் ஓஇன்றைய சூழ்நிலையில் இல்லங்களில் தமிழில் பேசுவது, எளிதே! கடினமே!ஔ என்கின்ற தலைப்பில் நடந் தேறியது. ஓஎளிதேஔ அணியில் திருமதி சாந்தி கதிரேசன், திரு. டில்லி துரை மற்றும் திரு கருணாகரன் ஆகியோர் வாதாடினர். ஓகடினமேஔ அணியில் திரு கந்தசாமி, திருமதி நித்யவதி சுந்தரேசன் மற்றும் திருமதி உமா குருசாமி ஆகியோர் வாதாடினர். முடிவில் நடுவர் ஓஇல்லங்களில் தமிழில் பேசுவது எளிதே என்று தீர்ப்பு அளித்தார். முடிவில் திருமதி உமையாள் முத்து அவர்களுக்கு தமிழ் மன்றத்தின் சார்பாக முன்னாள் மன்றத் தலைவர் திரு மணி மு. மணிவண்ணன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.

2007 ஆம் ஆண்டின் தொடக்கத்தையும் தமிழர் பெருவிழாவான ஓபொங்கல் விழாவைஔ நல்ல தமிழறிஞர்கள் முன்னிலையில் கொண்டாடியதில் இன்மன்றம் பெருமையும் பெருமகிழ்ச்சியும் அடைந்தது.

இவ்விழா பெருவெற்றியடைந்ததற்கு உதவியாக இருந்த அனைத்து தொண்டர்கள், பங்குப் பெற்ற அனைத்து கலைஞர்கள், கவிஞர்கள் மற்றும் பேச்சாளர்களுக்கு கோடி நன்றிகள். இன்சூரன்ஸ் கிடைக்க உதவிய கலிபோர்னியா தமிழ்க் கழகத்திற்கு மிக்க நன்றி.

தமிழ் மன்றத்தின் இனிவரும் நிகழ்ச்சிகள்:
சித்திரைக் கொண்டாட்டம் -
தமிழ்ப் புத்தாண்டு விழா
சனிக்கிழமை, ஏப்ரல் 14 2007
India Community Center, Milpitas

திரையிசைக் குயில் பத்மசிரீ சித்ரா பங்குபெரும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி; விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு சுட்டவும் www.bayareatamilmanram.org

தில்லை க. குமரன்

© TamilOnline.com