சிகாகோ தமிழ்சங்கத்தின் சார்பாக பொங்கல் விழா (ஜனவரி 18) மிகவும் கோலகாலமாக கொண் டாடப்பட்டது. சுமார் மூன்னூறுக்கும் அதிக மானவர்கள் கடுமையான குளிரையும் பொருட் படுத்தாது குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் கலந்து கொணடு சிறப்பித்தது, தமிழர்கள் கலா சாரத்தையும், பண்பாட்டையும் விட்டுவிடவில்லை என்பதையே காட்டியது. சிகாகோ தமிழ் சங்கம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் மிக உற்சாகத் துடன் கொண்டாடும் திருநாள் பொங்கல் திருநாள்.
தமிழ்த்தாய் வாழ்த்துடனும், அமெரிக்க, இந்தியா தேசிய கீதத்துடன் துவங்கிய விழாவிற்கு வந்தவர் களை, சங்கத் தலைவர் டாக்டர் கிருஷ்ணராஜ் அழகான தமிழில் வரவேற்று நிகழ்ச்சியை களை கட்டச் செய்தார். பின்னர், சிறுவர் சிறுமியரும் பெரியவர்களும் கலந்து கொண்ட விழா தொடங் கியது.
சிகாகோவைச் சேர்ந்த ஆசான் மாலதி தியாகராஜனின் மாணவி லாவண்யா ஐயரின் ''சிங்கார வேலனே தேவா'' அருமையான ஆரம்பமாக இருந்தது. கீர்த்தனா பிரகாஷின் 'இச பாலா'' பரத நாட்டியம் வந்திருந்தவர்களுக்கு ஒரு விருந்து. அடுத்து ''பூ பூக்கும் ஓசை'' என்ற திரையிசையை மிகுந்த ஆர்வத்துடன் ஆடிய சிறுவர் சிறுமியர் களுக்கும் பாராட்டு. விசித்ரா ராஜகோபலனின் ''அடியினை தொழு'' மிகவும் நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தது. அவரை அழகாக ஆட்டுவித்த திருமதி வித்யா பாபுவிற்கு பாராட் டுக்கள். ''எல்லாம் இன்பமயம்- என்ற சிம்மேத்திர மத்யமத்தில் சரஸ்வதி சோமநாதன் வெளுத்து வாங்கினார். ரவிசங்கரின் மிருதங்கம் அதற்கு ஒரு முத்தாய்ப்பு. நிவேதா சந்திரசேகரின் பாரதி பாட்டும், சுவேதா சுரேஷின் 'ஆல்பம்' திரைப்பட பாடலுக்கு நாட்டியமும், திவ்யா ஐய்யங்கார், ஆர்த்தி இஸ் ராணியின் ''கண்ணோடு காண்பதெல்லாம்'' திரை யிசை நடனமும் தெவிட்டாத தேன் விருந்து. பழைய, புது பாடல்களைக் கொண்டு ''மிக்ஸ்' செய்து குழந்தைகள் ஆடிய நடன நிகழ்ச்சி, சர்க்கரை பொங்கல் சாப்பிட்டது போல் மிகவும் நேர்த்தி. கண்டுகளித்தவர்களின் கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.
செவிக்கும் கண்ணுக்கும் விருந்து படைத்த தமிழ் சங்கத்தினர், வயிற்றுக்கும் பொங்கல் விருந்து அளித்து பிரமாதப்படுத்திவிட்டார்கள. இடை வேளைக்குப் பிறகு நடந்த பட்டிமன்றத் தலைப்பு ''தமிழ்த்திரை இசையில் மனதில் நிற்பது காதல் பாடல்களா? தத்துவப் பாடல்களா?'' திரு கடலூர் குமார் நடுவராகப் பொறுப்பேற்று மிகவும் அழகான முறையில் நடந்த பட்டிமன்றம் கருத்துடனும், நகைச்சுவையுடனும் இருந்தது. தமிழகத்தில் நடக்கும் பட்டிமன்றத்துக்கு இணையாக நடந்தது என்றாலும் மிகையில்லை. காதல் பாட்டுக்களே என்று நடுவர் தீர்ப்பு அளித்தாலும், பங்கேற்றவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பேசினார்கள். முத்துசுவாமி செல்வராஜின் நன்றியுரையுடன் இரவு சுமார் 11 மணிக்கு பொங்கல் விழா இனிதே நடந்தேறியது.
கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் சிகாகோ தமிழ்சங்கம், அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சாரத் தையும், திறமைகளையும், ஊக்குவிப்பதோடு, தமிழ்நாட்டிலிருந்து தமிழ் அறிஞர்களையும், கலைஞர்களையும் அழைத்து கவுரவித்து வருகிறது. பங்கு கொள்ள விரும்பும் தமிழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். டாக்டர் கிருஷ்ணராஜ் 847-541-5993.
ஜோவியட் ரகு |