'நிருத்ய ஸந்தியா' நடன நிகழ்ச்சி
San Francisco வளைகுடாப் பகுதியில் பிரபலமான 'வாஸ்யா' நடன நிறுவனத்தைச் சேர்ந்த இளம் நாட்டிய நங்கையர் மூவர் ஜனவரி மாதம், 18ம் நாள், சனிக்கிழமை மாலை 'நிருத்ய ஸந்தியா' எனும் நடன நிகழ்ச்சியை வழங்கினார்கள். Palo Alto நகரிலுள்ள Cubberley அரங்கில் இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தீபா ஸ்ரீகாந்த், ஜனனி நரா¡யணன் மற்றும் கவிதா திருமலை ஆகியோர் 'லாஸ்யா' நிறுவனத்தில் பயிலும் senior நர்த்தகியர் ஆவர். இவர்கள் ஒவ்வொருவரும் இந்தியாவில் பல வருடங்கள் நாட்டியப் பயிற்சி பெற்று அரங்கேற்றம் செய்தவர்கள். தமது அன்னை திருமதி. ரேவதி நரசிம்மன் அவர்களிடம் தீபா ஸ்ரீகாந்த் பாரம்பரியம் மிக்க வழுவூர் பாணயில் நடனம் பயின்று, காட்டியத்தில் கர்நாடக அரசின் 'வித்வத்' பட்டம் பெற்றவர். பெங்களூர் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார். ஜனனி நாராயணன், பெங்களூரில் பிரபலமான நாட்டியக் கலைஞர் திருமதி பத்மினி ரவி அவர்களிடமும், பின்னர் 'Raiska Academy of performing Arts' நிறுவனத்தைச் சேர்ந்த திரு. கிரண் சுப்ரமணியம், திருமதி. சந்தியா கிரண் ஆகியோரிடம் தக்க நடனப் பயிற்சி பெற்று அவர்கள் வழங்கிய நடனநிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று டனமாடியுள்ளார். கவிதா திருமலை, நாக்பூரைச் சேர்ந்த மீரா சந்திரசேகர், பெங்க ளூரைச் சேர்ந்த டாக்டர் ஹேமா கோவிந்தராஜன் மற்றும் நியூஜெர்சியைச் சேர்ந்த ரம்யா ராம் நாராயணன் ஆகியவர்களிடம் பல ஆண்டகள் பயிற்சி பெற்றவர். இவர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடைபெற பல நாட்டிய நிகழ்ச்சிகளில் நடன மாடியுள்ளார். இளம் கலைஞர்கள் மூவரும் san Francisco வளைகுடாப் பகுதியில் குடியேறிய பின் 'லாஸ்யா' நாட்டியப் பள்ளியில் சேர்ந்து திருமதி. வித்யா சுப்ரமணியன் அவர்களிடம் தொடர்ந்து நடனம் பயின்று வருகின்றனர். நங்கையரின் நடன பாணிகள் வெவ்வேறுபட்டனவாக இருப்பினும் அவர்கள் ஒருங்கிணைந்து நடனமாடும் வகையிலும், அவர்களின் திறமைகள் பலவும் வெளிவந்து பிரகாசிக்கும் வகையிலும் முழுமையானதொரு நாட்டிய நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கிய பெருமை திருமதி. வித்யாவையே சேரும்.

தென்னிந்திய ஆலயங்களில் இறைவனை ஊர்வலமாக எடுத்து வரும்போது இசைக்கப்படும் 'மல்லாரி' இசையுடன நிகழ்ச்சி ஆரம்பமாகியது. நிகழ்ச்சிய் முதல் பாதியில் இடம்பெற்ற விநாயகர் துதியான 'முதாகார்த்த மோதகம்' மயிலேறும் முருகனைப் போன்றும் 'மயில் வாஹகு' என்ற பாபநாசம் சிவன் பாடல், மற்றும் வர்ணம் ஆகிய நடனஙுகள் அனைத்திலும் நடனமணிகள் மூவரும் இணைந்தே நடனமாடினார்கள். ஒருவருக்கொருவர் இணையாக அமைந்த அசைவுகளுடன் மேடை யெங்கும் சுழன்று அவர்கள் ஆடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. கண்ணபிரானை இறைஞ்சும் 'இன்னும் என் மனம்' என்கிற சாருகேசி ராகத் திலமைந்த வர்ணத்திற்கு அவர்கள் ஆடிய நடனம், அபிநயம், தாளம், ஐதிகளுக்கேற்ற கச்சிதமான அடவுகள் இவற்றில் நங்கையர் அடைந்திருக்கும் சிறந்த பயிற்சியை எடுத்துக்காட்டியது.

இடைவேளைக்குப் பின் கலைஞர்கள் மூவரும் தனித்தனியே நடனமாடி தமது திறமையை வெளிப் படுத்தினார். தில்லியில் நடமிடும் சிவபெரு மானின் பெருமையைப் பாடும் 'ஆனந்த நடமாடுவார்' என்ற பாடலுக்கு, வித்யா சுப்ரமணியன் அவர்களின் நடனஅமைப்பில் ஜனனி ஆடிய நடனம் விறுவிறுப் பாகவும் அழகாகவும் அமைந்தது. நடனமாடும் சிவனின் தோற்றங்களை காட்டும் வகையில் ஜனனி பிடித்த நாட்டிய போஸ் பலவும் சிறப்பாக இருந்தன. காக்கும் கடவுளாகக் கருதப்படும் மஹாவிஷ்ணு, தீயோரை அழிக்கும் கூற்றுவனாகவும் ஆவார் என்ற பொருள் கொண்ட புரந்ததாசரின் பாடலுக்கு திருமதி ரேவதி நரசிம்மனின் நடனஅமைப்பில் தீபா ஸ்ரீகாந்த் நடனமாடினார். தூணைப் பிளந்துகொண்டு வரும் நரசிம்மரின் தோற்றத்தையும், போர்க்களத்தில் விஸ்வரூபமெடுக்கும் கண்ணனின் தோற்றத்தையும் அவரது நடனம் கச்சிதமாகக் கண்முன் கொண்டு வந்து, ரசிகர்களின் கைதட்டுதலைப் பெற்றது. விரகத்தில் தவிக்கும் ராதையின் தோழியாக கவிதா திருமலை தோன்றி ஜெயதேவர் அஷ்டபூபதிக்கு அழகாக நடனமாடினார். அபிநயத்தில் தமக்கெனத் தனியிடம் பெற்றிருக்கும் திருமதி கலாநிதி நாராயணன் அவர்கள் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். ராதையிடம் கண்ணனின் மையலை எடுத்துரைக்கும் போது கவிதாவின் முகபாவங்கள் இவர் அபிநயத்தில் தேர்ந்தவர் என்பதைத் தெளி வாக எடுத்துக்காட்டின. பெரும்பாலான நடனங் களுக்கு இனிமையான மாலைநேர ராகங்களில் அமைந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத் தக்கது. மேடையலங்காரம், ஒளியமைப்பு இவற்றில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். திருமதி. ஆஷாரமேஷின் இன்குரலுடன் திருமதி. சாந்தி நாராயணனின் வயலின் இணைந்து ஒலித்தது செவிக்கும் இனிமை. நடன நங்கையரின் சலங்கை ஒலிக்கு ஆதாரமாக அமைந்தது திரு. நாராயணனின் தேர்ந்த மிருதங்க வாசிப்பு. திருமதி. வித்யாவின் நட்டுவாங்கத்தில் நல்ல கம்பீரம். ''நிருத்ய ஸந்தியா'' பெயருக்கேற்றபடி மனங்கவரும் நடனமும், செவிக் கினிய இசையும் இணைந்து உள்ளங்களை மகிழ்விக்கும் மாலைப்பொழுதாக அமைந்துவிட்டது!

அருணா

© TamilOnline.com