தங்க முருகன் விழா 2006
கடந்த ஆறு வருடங்களாக கார்த்திகை மாதம் தங்க முருகன்விழா வெகுவிமரிசையாக தமிழர் கடவுளாகிய தங்கமுருகன் பக்தர் களால் லமாண்டில் (சிகாகோ மாநகரம் அருகில்) உள்ள இந்து கோவிலில் கொண்டாடப்படுகிறது. இந்த வருட விழாவில் தெய்வத் திரு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் நூறாவது ஆண்டு முருகப் பணியை சிறப்பு அம்சமாக கொண்டு கொண்டாடப்பட்டது. காலை பத்து மணியிலிருந்து மாலை ஒன்பது மணிவரை நடந்த இந்த விழாவிற்கு 500க்கும் மேலான முருக பக்தர்கள் தங்கள் குடும்பத் தோடு வந்து வழிபட்டனர்.

காலை பத்து மணிக்கு வள்ளிதேவயானை முருகனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து சிகாகே திருப்புகழ் நண்பர்கள் 'எந்த வினையும்... வர வேண்டுமே முருகனே'' என்ற திருப்புகழ் பாட, ஊர்வலமாக தங்கமுருகனை மேடைக்கு அழைத்து வந்தது கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது.

மேடையில் அலங்காரம் செய்யப்பட்ட தங்கமுருகன் எல்லோர் கவனத்தையும் கவர்ந்தார். பன்னிரண்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடந்த கலை நிகழ்ச்சியில் 140 குழநதைகள் சிறுவர், சிறுமிகள், முதியவர்கள் அன்புடனும், பக்தியுடனும் அவன் புகழை பாடி, ஆடி வந்தவர்களை பரவசப்படுத்தினர்.

குறிப்பாக சிறுவர், சிறுமியர் நடத்திய 'Little Murga Show" எல்லோரும் புகழும்படி அமைந்தது. இந்த கலைநிகழ்ச்சிக்காக சிகா கோவில் உள்ள பாட்டு, நாட்டிய ஆசிரியர்கள் கடந்த மூன்று மாதமாக தங்கள் மாணவர் களை தயார் செய்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். டெட்ராய்ட்லிருந்தும் மாணவர்கள் இந்த கலைவிழாவில் கலந்து கொண்டனர்.

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் வரலாற்று பேச்சு கேட்க கேட்க ஆனந்தமாக இருந்தது. சிகாகோவில் உள்ள ஒட்டல்களும், தங்க முருக பக்தர்களுக்கு உணவு வழங்கினர். இந்த தங்கமுருகன் விழா ஒவ்வொரு வருடமும் முருகன் அருளால் டிசம்பர் இரண்டாவது சனிக்கிழமை நடக்கவுள்ளது. விழாவிற்கு நுழைவு கட்டணம் கிடையாது.

இந்த விழாவைப் பற்றி மேலும் தகவல் அறிய ஆர்வமுள்ள தங்கமுருக பக்தர்கள் தயாரிப்பவர் தங்கமுருகன் என்பவரை இந்த தொலைபேசி எண்களின் 630-972-0300, 630-982-4049 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

© TamilOnline.com