சமீபகாலத்தில் 'ஸேன் லியான்ரோ' என்ற இடத்தில் அமைந்துள்ள 'பத்திரிகாக்ஷ்ரமா' என்ற ஆசிரமத்திற்கு நிதி உதவி செய்யும் நோக்கத்துடன் நிருத்ய மேளராக மாலிகா' என்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வளைகுடா பகுதியில் பல்வேறு நோக்கங்களுக்காக கலைநிகழச்சிகள் நடத்தப் படுவது வழக்கம் என்றாலும், இந்த கலைநிகழ்ச்சி பொழுது போக்கு அம்சமாக மட்டுமல்லாது, கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளவும் உதவியது.
பத்ரிகாஷ்ராமா பல வருடங்களாக சமுதாயத்திற்கு பல தொண்டுகளை செய்து வருகிறது. அதன் ஸ்தாபகர் சுவாமி ஓம்கார நந்தா ஆவார். அவர் வளர்ந்து வரும் பல இசைக்கலைஞர்களை அங்கு வரவழைத்து தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர சந்தர்ப்பம் அளித்து கொண்டிருக்கிறார். இதுதவிர கர்நாடக மாநிலத்திலுள்ள மதஹல்லி' என்ற ஊரிலும் ஆசிரமத்தை அமைத்து கொண்டு பல சமூக தொண்டுகளை செய்து வருகிறார். பொதுநல தொண்டை மையமாக கொண்ட இத்தகைய ஆசிரமத்திற்கு நிதியுதவி செய்வதற்காக, தயாரிக்கப்பட்ட தரமான இக்கலை நிகழ்ச்சியில் பங்கு பெற எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி மிகவும் பெருமைப் படுகிறேன்.
'மேளராக மாலிகா' என்னும் வடமொழி நூல் தலைசிறந்த வாக்கேய காரரான ஸ்ரீ மஹா வைத்யநாத சிவன் அவர்களால் இயற்றப்பட்டது. கி.பி. 1844 முதல் கி.பி. 1893 வரையில் 48 வருடங்கள் வாழ்ந்த இவர் தஞ்சை மாவட்டத்தில் வையச்சேரி கிராமத்தில் தோன்றியவர். ஒரு சிறந்த சிவ பக்தர். ஸ்ரீ சிவன் இயற்றியிருக்கும் இந்த நூலிலிருந்து அவருடைய வேத. இதிகாச, புராண, தர்மசாஸ்திர, சைவ ஆகமங்களை பற்றியும், மற்றும் தமிழ் இலக்கியங்களான பெரிய புராணம், திருவிளை யாடற்புராணம், தேவாரம், திருவாய்மொழி இவைகளில் உள்ள அறிவின் வெளிப்பாட்டை அறிகிறோம்.
இவருடைய 72 மேளகர்த்தா ராகங்களும் 'தாய் ராகங்கள்' என்று அழைக்கப்படும். இதுவே கர்நாடக சங்கீதத்தின் தூண்கள் என போற்றப்படும்.
இந்த 72 மேளகர்த்தா ராகங்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிற 'மம்' என்னும் ஸ்வரம் சுத்தமத்யமாக இருந்தால் அது பூகவ ராகங்கள் என்றும், அதே 'ம' பிரதிமத்யமாக இருந்தால் 'உத்தரராகங்கள்' என்றும் அழைக்கப்படுகிறது.
மேளகர்த்தா ராகங்கள் அனைத்தும் 12 சக்கரங் களில் அடங்கும். அதில் 6 சக்கரங்கள் பூர்வ ராகங்களை அடிப்படையாகவும் மற்ற 6 சக்கரங்கள் உத்தரராகங்ளை அடிப்படையாகவும் கொண்டது. 1 சக்கரத்திற்கு 6 ராகங்கள் விகிதம், 12 சக்கரங்களில் 72 ராகங்களும் அடங்கும்.
இந்த சக்கரங்களின் பெயர்கள் இந்து, நேதரா, அக்னி, வேதா, மாதை, துருது, ரிஷி, வஸீ, ப்ரும்மா, தியா, ருத்ர, ஆதித்யா ஆகும்.
இந்த கலைநிகழ்ச்சியில் கலைஞர்கள் மேளகர்த்தா ராகங்களை கற்று பாடியது மட்டுமல்லாமல், புதுமையாக 2 சக்கரங்களுக்கு (12 ராகங்கள்) இடையே அந்தந்த சக்கரத்தில் வரும் ராகங்களை தழுவிய ராகங்களில் வெவ்வேறு மொழிகள் பாடல்களை அமைத்தனர். இந்த பாடல்கள் அந்தந்த சக்கரத்தில் வரும் புராண கதைகளை ஒட்டி அமைந்திருந்தது. இப்பாடல்களை நடனத்திற்கு ஏற்றப்படி அமைத்து கொண்டு ஆர்த்தி, இந்துமதி கணேஷ் மற்றும் அவரது குழுவினரும் மிக அருமையாக ஆடினார்கள். தமிழில் அமைந்த பாடல்களை திருமதி அனுராத ஸ்ரீதரும், கன்னடத்தில் அமைந்த பாடல்களை திருமதி சகுந்தலா மூர்த்தியும், தெலுங்கில் அமைந்த பாடல்களை திரு. முரளி கிருஷ்ணாவும் இயற்றி உதவினார்கள்.
இதுதவிர மேளகர்த்தா ராகங்களை பாடும்போது அந்தந்த ராகங்களின் ஆரோக அவரோகணங்களை பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் project செய்ததும், ஸ்ரீதரின் விரிவுரைகளும் பெரும் வகையில் உதவி செய்தன.
ஸ்ரீராம் பிரும்மானந்தம், சாந்தி ஸ்ரீராம், அசோக் சுப்ரமணியம், ரஞ்சனி, மீனக்ஷ¢ அனைவருடன் இந்த அரிய முயற்சியில் நானும் ஒரு பாடகியாக பங்கேற்றதற்கு பெருமைப் படுகிறேன்.
டாக்டர். கல்பகம் கௌசிக் |