மீண்டும் சரிதா
பாலுமகேந்திரா எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், விளம்பரம் இல்லாமல் 'ஜூலி கணபதி' என்ற ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார். திகில் டைப் படம். மனதை தொடும் காதல் கதையும் உண்டாம்? இப்படத்திற்கு இசை இளையராஜா. அவரின் கைவண்ணத்தில் ஐந்து பாடல்கள்.

ஜெயராமும் முன்னாள் நாயகி சரிதாவும்தான் முக்கியமான கதாபாத்திரங்கள்... சரிதா மிகவும் குண்டாக படத்தில் காணப்படுகிறாரே என்று பாலமகேந்திராவிடம் கேட்டபோது ''அதுதான் நான் எதிர்பார்த்தது; இன்னும் அதிக சதை போடச் சொன்னேன்'' என்கிறார். சரிதாவின் நடிப்பு அவர் நடித்த எல்லாபடத்தைக் காட்டிலும் இப்படத்தில் அதிக அளவு தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com