“நீங்கள் மாணவரா? தமிழ் நாட்டுக் கலாச்சார, பண்பாடு, மொழி சம்மந்தமுள்ள பயிற்சிகளில் ஈடுபாடு உள்ளவரா? தமிழ் நாட்டிற்குச் சென்று அவ்விதப் பயிற்சிகளில் ஈடுபட ஆர்வமா? இந்தச் செய்தி உங்களுக்குத்தான்.”
தமிழ்நாடு ·பௌண்டேஷன்(TNF) தேசியத் தமிழ் இளைஞர் குழு(NTYO) என்கிற இயக்கத் தைத் துவங்கி நடத்தி வருகிறது. இந்தக் இயக்கம் வட அமெரிக்காவில் இருக்கும் தமிழ் இளைஞர் களுக்கும், இந்தியாவில் இருக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் பாலம் அமைத்து, அவர்கள் வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சார வளர்ச்சிக்கும் உதவுவதாகும். ஆண்டு தோறும் இந்தக் குழுவின் மாநாடு அமெரிக்காவிலும், கானடாவிலும் நடை பெறுகிறது. சுமார் 300 இளைஞர்கள் இதில் பயிற்சி பெருகிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டில் ஈடுபடுகிறார்கள்.
தேசிய தமிழ் இளைஞர் குழு “மெடிவேன் திட்டம்” என்ற திட்டத்தை நடத்துகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ் கலாசாரத்தைக் கற்றுக் கொள்ள, விருப்பமுள்ள அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவில் உள்ளத் தமிழக கிராமத்திற்கு அனுப்பப்படுவார்கள். அங்குள்ள இந்திய இளைஞர்களுடன் இணந்து நேர்முகமாகச் செயல் படுவார்கள். இதன் மூலம் பழகும் திறம் அதிகரிப் பதுடன், இருதரப்பு இளைஞர்களுக்கும் ஆக்க சக்தி அதிகரிக்கிறது. சமூக சேவை, தமிழ் கலாச்சாரம், பண்பாடு அடிப்படையில் பயிற்சிகள், தமிழ் கல்வி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் செயல்படும்.
பொதுவாக இந்தத் திட்டங்களை நடத்தித் தர ஆதரவு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனத் தைச் சேர்ந்தவர்கள் எந்த கிராமத்தில் எந்த விதமான பயிற்சியை நடத்த வேண்டும் என்று தேர்வு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அதற்குத் தகுந்த இளைஞர்களையும் தேர்வு செய்து கொள்வார்கள். NTYO மாணவர்களின் மனுக் களைப் பெற்று ஆதரவு நிறுவனங்களுடன் சேர்ந்து பயிற்சிகளை ஏற்பாடு செய்கிறது. இந்த மெடிவேன் பயிற்சிகள் பொதுவாக மே, ஜுன் மாதங்களில் நடத்தப்படும். அதில் கலந்து கொண்ட மாணவர்கள் ஜூலை மாத மாநாட்டில் பரிசுத் தொகையாக $1000 பெறுவார்கள். மற்றபடி, இந்தியாவிற்கு பயணக் கட்டணம் மற்றும் தங்குமிடச் செலவுகள் மாணவர்களைச் சேர்ந்தது.
மேலும் விபரங்களை www.ntyo.org என்ற வலைத்தளத்தில் காணவும். மார்ச் முதல் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், மற்றும் ஆதரவு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் லைத்தளத்தில் காணலாம். |