காரட் அல்வா
தேவையான பொருட்கள்

காரட் - 250 கிராம்
பால் - 200 மில்லிகிராம்
சர்க்கரை - 350 கிராம்
நெய் - 150 கிராம்
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் - சிறு பட்டாணி அளவு

செய்முறை

காரட்டைத் தோல் சீவி கொப்பரைத் துருவலில் துருவிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து துருவிய காரட்,பால் இவைகளை விட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.

காரட் குழைய வெந்த பின் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும்.

காரட், பால் கலவை சுருண்டு வரும் சமயம் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறி, வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் இவைகளைப் போட்டுக் கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிச் சமப்படுத்தித் துண்டுகள் போடவும்.

© TamilOnline.com