தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு - 350 கிராம் சர்க்கரை - 800 கிராம் நெய் - 400 கிராம் பால் - 400 மி.லி முந்திரிப் பருப்பு 50 கிராம் ஏலக்காய்ப் பொடி 1 டீஸ்பூன் குங்குமப்பூ - சிறு பட்டாணி அளவு கேசரிப் பவுடர் - சிறிதளவு பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
செய்முறை
பாதாம் பருப்பைக் கொதிக்கும் வெந்நீரில் ஊற வைத்துத் தோலை எடுத்து விட்டுப் பால் விட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் அரைத்த விழுது, மீதமுள்ள பாலை விட்டுச் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறவும்.
அதனுடன் கேசரிப்பவுடர், குங்குமப்பூ இவற்றைக் கரைத்து விட்டுக் கிளறவும்.
நன்றாக இறுகி வரும் சமயம் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும்.
ஒடித்து வறுத்த முந்திரி, ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் இவைகளைச் சேர்த்துக் கிளறிச் சுருண்டு நெய்யைக் கக்கும் சமயத்தில் இறக்கி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பித் துண்டுகள் செய்யவும். |