தேவையான பொருள்கள்
உளுந்தம் பருப்பு - 250 கிராம் நெய் - 50 கிராம் பால் கோவா - 50 கிராம் சர்க்கரை - 100 கிராம் கேசரி பவுடர் - சிறிதளவு பாதாம்பருப்பு - 5 சாரைப்பருப்பு 5 குங்குமப்பூ - 1 சிட்டிகை பன்னீர் - 2 மேசைக்கரண்டி
செய்முறை
உளுந்தம் பருப்பை இரவு தண்ணீரில் ஊற வைத்து, மறு நாள் அதை உரலில் போட்டுக் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் நெய்யை விட்டு அரைத்து வைத்துள்ள உளுந்து மாவைப் போட்டு அடி பிடியாமல், கிளறி விடவும்.
மாவு சிவப்பானதும், பால் கோவா,சர்க்கரை இவற்றைப் போட்டுக் கிளறி விடவும். அல்வா பதத்துக்கு வந்ததும் சிறிது கேசரி பவுடர் போட்டுக் கிளறி இறக்கி வைக்கவும்.
பாதாம் பருப்பைத் தண்ணீரில் ஊற வைத்து தோலை உரித்து விட்டு வறுத்து வைக்கவும்.
அத்துடன் சாரைப் பருப்பையும் வறுத்து சிறிது குங்குமப்பூ எல்லாவற்றையும் அல்வாவில் கொட்டி பன்னீர் விட்டுக் கிளறி மூடி வைக்கவும்.
பிறகு நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி ஒரு அங்குல கனத்துக்குச் சமப்படுத்தி, ஆறிய பின் துண்டு துண்டுகளாகச் செய்து எடுத்து வைக்கவும். |