தேவையான பொருள்கள்
நேந்திரம் வாழைப்பழம் - 5 நெய் - 100 கிராம் ரவை - 100 கிராம் சர்க்கரை - 200 கிராம் பால் - 250 மி.லி. ஏலக்காய் - 5
செய்முறை
வாழைப்பழங்களைத் தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக அரிந்து கொள்ள வேண்டும்.
வாணலியில் சிறிது நெய்விட்டுக் காய்ந்ததும், வாழைப்பழத் துண்டங்களை அதில் போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்..
ரவையையும் சிறிது நெய்விட்டு வறுத்துக் கொள்ளவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சர்க்கரையைப் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைந்தவுடன் சர்க்கரைக் கரைசலை வடிகட்டி, மறுபடியும் அடுப்பிலேற்றிப் பாகு தயாரித்துக் கொள்ளவும்.
இப்படிச் செய்வதால் சர்க்கரையில் உள்ள அழுக்கு, கசடு போன்றவை நீங்கி விடும்.
பாகு பதமானதும் வறுத்து வைத்துள்ள ரவையை அதில் கொட்டி, காய்ச்சிய பாலை விட்டுக் கிளற வேண்டும்.
சிறிது நேரம் அதை மூடி வைத்துவிட்டு, வதக்கி வைத்திருக்கும் வாழைப் பழத்துண்டங்களை சர்க்கரை பால் கரைசலில் போட்டுக் கிளறவும்.
இரண்டு கரண்டி நெய்யும், ஏலக்காய்ப் பொடியும் சேர்த்துக் கிளறி, ஆறிய பின் வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
குழந்தைகளின் உடல் நலனுக்கேற்ற பக்குவம் இது. மிகவும் சுவையுடனும் இருக்கும். |