தேவையான பொருள்கள்
உருளைக்கிழங்கு - 200 கிராம் சர்க்கரை - 200 கிராம் நெய் - 100 கிராம் பாதாம் பருப்பு - 10 கிராம் சாரைப்பருப்பு - 10 கிராம் ஏலக்காய் - 5
செய்முறை
உருளைக் கிழங்கை வேக வைத்துத் தோலை உரித்து விட்டு நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்.
பாதாம் பருப்பைத் தோல் நீக்கி அரிந்து வைத்துக் கொள்ளவும். சாரைப் பருப்பையும் சிறிதளவு நெய் விட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை அடி கனமான ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
பாகு நன்றாகக் காய்ந்தவுடன், மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கை அதில் போட்டுக் கிளறி விடவும். சிறிது நேரம் கழித்து நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக அதில் விட்டுக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கையில் ஒட்டாமல் கெட்டியான பக்குவத்துக்கு வந்ததும் ஏலக்காய்களைப் பொடிசெய்து போட்டு, பாதாம் பருப்பு சாரைப்பருப்பையும் போட்டுக் கிளறி விடவும்.
சூடு ஆறிய பின் ஒரு தட்டில் கொட்டிப் பரப்பித் துண்டங்களாகச் செய்து வைத்துக் கொண்டு பரிமாறவும். |