தேவையான பொருள்கள்
ஜவ்வரிசி - 250 கிராம் பால் - 50 மி. கிராம் நெய் - 150 கிராம் நெய் - 150 கிராம் சர்க்கரை - 500 கிராம் முந்திரிப்பருப்பு - 4 சாரைப்பருப்பு - 4 எலுமிச்சம்பழம் - பாதி மூடி கேசரி கலர் - 1 சிட்டிகை
செய்முறை
ஜவ்வரிசியைத் தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊறிய ஜவ்வரிசியை மிக்ஸியில் போட்டு வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரையில் 250 மி.லி. தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சிக் கொள்ளவும். (தண்ணீர் கொஞ்சம் குறைவாகக்கூட இருக்கலாம்) பாகு நன்றாகக் கொதிக்கும்போது, அதில் பாலை விட்டுப் பாகில் அழுக்கை எடுத்து விடவும்.
பாகு கெட்டியான கம்பிப் பதம் வந்ததும், அரைத்து வைத்துள்ள ஜவ்வரிசிமாவில் ஒரு குவளை தண்ணீர் விட்டு கூழ் போல் கலந்து கொண்டு , அதைப் பாகில் போட்டு, நெய்யும் விட்டு, அடி பிடியாமல் நன்றாகக் கிளற வேண்டும்.
வாணலியில் ஒட்டாமல் நன்றாகச் சுருண்டு வரும்போது இரண்டு கரண்டி நெய்யை விட்டு, வறுத்த முந்திரிப் பருப்பு, சாரைப்பருப்பு, அரைமூடி எலுமிச்சம் பழத்தின் சாறு, கேசரி பவுடர் இவற்றைப் போட்டு, நன்றாகக் கிளறி ஒரு தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி, ஆறியபின், துண்டு துண்டாகச் செய்து கொள்ளவும்.
சூடாக சாப்பிடும்போது கோதுமை அல்வா போன்றே சுவை தரக்கூடியது. |