ஆப்பிள் அல்வா
தேவையான பொருள்கள்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 350 கிராம்
குங்குமப்பூ - சிறிதளவு
ஆப்பிள் - 2
நெய் - 100 கிராம்

செய்முறை

பாலை ஒரு சட்டியில் விட்டுச் சுண்டக் காய்ச்சி கோவா தயாரித்துக் கொள்ளவும்.

மறுநாள் அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு குவளை தண்ணீர் விட்டு, சர்க்கரையைப் போட்டுக், கம்பி போல் பாகு பதமாக வரும்போது, முன்பு தயாரித்து வைத்திருக்கும் கோவாவை அதில் போட்டுக் கிளறி விடவும். குங்குமப்பூவையும் போட்டுக் கிளறி விடவும்.

அடுப்பின் தீயைக் குறைத்து விட்டு, ஆப்பிள் பழங்களைத் தோல் நீக்கி, மெல்லியதாய் நறுக்கி அதைக் கோவாவுடன் கொட்டி அடி பிடியாமல் கிளறி விட வேண்டும். நெய்யையும் சேர்த்துக் கிளறி விடவும்.

அல்வா பதமானதும் ஒரு தட்டில் நெய் தடவி, அதைக் கொட்டிப் பரப்பில் ஆறியவுடன் சதுரமாகவோ, டைமன் வடிவிலோ சிறு சிறு துண்டுகளாகச் செய்து கொள்ளவும்.

ஆப்பிள் அல்வா ஆறிய பின் சாப்பிட சுவையாகயிருக்கும்.

© TamilOnline.com