சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கிடைப்பது பிரச்சனையாகவே இருக்கிறது. எந்த இடத்தைத் தொட்டாலும் மக்கள் கொந்தளிக்கிறார்கள். சென்னை நகரில் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பல ஆண்டு உழைப்பு ஆகும். அவ்வாறு கட்டப்பட்டவீட்டின் தவணைகள் முடியும் முன்பே எனக்குக் கொடுஒ என்று கேட்பதால் இந்தக் கொந்தளிப்பு. இதற்கு என்ன காரணம்? நகர விரிவாக்கம் குறித்த திட்டம் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்குக் கூட இல்லை என்பதுதான். எதிர்கால விரிவாக்கத்துக்கு- முன்பே திட்டமிட்டு, இடங்கள் வீடுகளாகும் முன்பே கையகப் படுத்தி இருந்தால் இப் பிரச்சனை இல்லை. அல்லது மாற்று இடங்களாவது தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும். சரி, அப்படியே தற்போது விமான நிலைய நிர்வாகம் கோரும் இடத்தை மக்கள் தியாகம் செய்ய முன்வந்தாலும்கூட அது எத்தனை ஆண்டுகளுக்குப் போதும். விமான போக்குவரத்து நாளுக்கு நாள் பெருகிவரும் சூழ்நிலையில் விமானபோக்குவரத்துத் துறை அமைச்சகம் சிந்தித்துச் செயல்படுமா?
தொகுப்பு: அப்பணசாமி |