கெட்ட பிறகு திருந்துவதே அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. அதுவும் ஆளும்கட்சி என்றால் யார் கூறுவதும் காதில் ஏறாது. கடைசியாக நீதிமன்றங்கள் இடித்துக் கூறிய பிறகே ஞானோதயம் பிறக்கும். சென்னை மாநகராட்சித் தேர்தல் விவாகரத்திலும் அதுதான் நடந்துள்ளது. ஆளும் கட்சியினர் தேர்தல் வன்முறையில் ஈடுபட்டதாக எதிர்க் கட்சி மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சிகளும்கூட புகார் கூறின. ஆனால் ஆளும் கட்சி அப்போது அதை அலட்சியம் செய்தது. இப்போது உயர்நீதிமன்ற நீதிபதி இடித்துக் கூறியபிறகு 99 வார்டுகளுக்கும் மறு தேர்தல் நடத்த முன் வந்துள்ளது. மீண்டும் கலவர பீதி!
தொகுப்பு: அப்பணசாமி |