கலைக்குடும்பத்தின் அடுத்த வாரிசு
நடிப்பில் இமயமெனத் திகழ்ந்த நடிகர் திலகத்தின் பேரன் (மூத்தமகன் ராம்குமாரின் மகன்) துஷ்யந்தன், ஜூனியர் சிவாஜியாக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமாகிறார். இசக்கி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பெயர் என்ன தெரியுமா? நடிகர் திலகம் தனது முதல் படத்தில் முதல் முறையாகப் பேசி நடித்த வசனம் தான் இந்தப் படத்தின் பெயர். 'சக்ஸஸ் சக்ஸஸ்' என்ற இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நந்தனாவும், சோனியா அகர்வாலும் நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர ரோஜா, ஊர்வசி, ரமேஷ்கண்ணா,கருணாஸ் என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்குக் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சுரேஷ் பிரசன்னா. விவேகா எழுதிய பாடல்களுக்கு தேவா இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வருகிற மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுப்பு: க.காந்திமதி

© TamilOnline.com