மார்ச் 2003 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

குறுக்காக:

3. நிறம் தரும் பொருளில் தலையில்லா விமானி நுழைவது எளிது (5)
6. மண்டலத்தின் பகுதி ஒரு மாநகர் (4)
7. கோபத்தில் தேன் துளி அடையாளம் (4)
8. கையற்ற பெண் விசிறி பித்த மை கலக்க புத்தி பேதலிப்பு (6)
13. மாசி மாதம் இறுதியில் கிராமத்து மக்கள் வர உயர்வான நாற்காலி (6)
14. மாரியம்மனை வரவேற்கும் தோரணம் (4)
15. வாகனத் தடையில் உருவம் பெரிதானதை விவரிக்கும் (4)
16. கட்டிடம் தொடங்க நடப்படுவது தாக்க வேல் முனை (5)

நெடுக்காக:

1. அதிகாரப் பூர்வமான முத்திரை கிடையாது, உடலுறுப்பு (5)
2. தாண்டிச் சென்றவை பாலைத் தவிர்த்து மாற்றிப் பாட கந்தலை வை (5)
4. பெருமை அடை (4)
5. அரேபிய நாட்டில் காட்டுக்கு முன்னே யமன் தலை வைத்தான்(4)
9. செய்யுளற்ற இதிகாசத் தேர் (3)
10. இடி உள்ளே மது ஒழிப்பால் சமமானது தரமற்றது (5)
11. வாய் பேசாதிருப்பதன் பொருள் (5)
12. பிழைக்க டில்லியில் ஆரம்பித்து எட்டு ...(4)
13. அசையாமல் ஆட ஒழிந்த கடலை ஆசியா மாற்றும் (4)

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக: 3.சாமானியம், 6.லண்டன் 7.சின்னம் 8.சித்தபிரமை 13.சிம்மாசனம் 14.வேப்பிலை 15.கனத்த 16.அடிக்கல்
நெடுக்காக:1.இலச்சினை 2.கடந்தவை 4.மாட்சிமை 5.யவனம் 9.ரதம் 10.மோசமானது 11.சம்மதம் 12.தப்படி 13.சிலையாக

© TamilOnline.com